சுவாரசிய சினிமா - Sakhavu (Malayalam)
ஒவ்வொரு திரைப்படமும் நிகழ்காலத்தின் பதிவு .சமகால அரசியல் ,மக்களின் வாழ்வியல் ,சமுக மாற்றம் ,இப்படி பல தன்மைகளை தன்னை அறியாமல் பதிவு செய்யும் கருவி சினிமா .காலம் எத்தனை வேகமாக ஓடினாலும் அதன் ஓட்டத்துக்கு ஈடுக்கொடுத்து திரைத்துறையும் இயங்கிக் கொண்டே இருக்கிறது . மலையாள சினிமா எப்பொழுதும் யதார்த்த நிலையில் இருந்து தன்னை மாற்றிக் கொண்டதே இல்லை .எத்தனை தொழில்நுட்பம் வளர்ந்தாலும் மண் சார்ந்தும் அவர்களின் வாழ்வியல் சார்ந்துமே அங்கு திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன .அடுத்து கருத்து சுதந்திரம் தமிழகத்தை ஒப்பிடும் பொழுது பலப்படி முன்னே உள்ளது . Sakahavu (தோழர் ) படம் முன் எப்பொழுது வெளிவந்து இருந்தாலும் இத்தனை பெரிய தாக்கத்தை ஏற்ப்படுத்தி இருக்குமா தெரியவில்லை .ஆனால் இப்பொழுது உள்ள அரசியல் சூழலில் மிகவும் முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது .குறிப்பாக கேரளாவில் ஆர் எஸ் எஸ் தன் கரத்தை வலுப்படுத்த முயலும் இவ்வேளையில் இத்திரைப்படம் தோழர்களுக்கு புதிய புத்துணர்வை தந்து இருக்கும் . உண்மையில் திரைப்படத்தின் தாக்கம் என்பது உங்களை உணர்வுக்கொள்ள செய்ய வேண்டும் .அத்தைகைய உணர்வு இந்த திரைப்படத்