சுவாரசிய சினிமா - Don't Breathe


கிரைம் -த்ரில்லர் படங்கள் வரிசையாக வெளிவந்து கொண்டு இருந்தாலும் சில படங்கள் நம்மால் மறக்க முடியாது .தமிழில் ஊமை விழிகள் பெரும் சலனத்தை ஏற்படுத்தியது .காரணம் புதிய களம் காண்பிக்கும் பொழுது ரசிகர்களின் அட்ரலின் அதிகமாக சுரக்க தொடங்கி விடும் .இந்த curiosity - ஐ நீங்கள் ஏற்ப்படுத்தி விட்டால் போதும் .கண் எடுக்காமல் பார்க்க தொடங்கி விடுவார்கள் .

புதிய சிந்தனையை மக்கள் அனைவரும் வரவேற்க தயாராகவே உள்ளனர் .கடந்த வருடம் வெளி வந்த Don't Breathe குறித்து நிறைய எழுதி தள்ளி விட்டார்கள் .இனி எழுத எதுவும் இல்லை ஆனால் இந்த படத்தில் இருந்து சில பாடங்களை நாம் கற்றுக் கொள்ள வேண்டும் .

முதல் விஷயம் படத்தின் ஆரம்ப காட்சி Aerial Shot -ல் இருந்து தொடங்கி இருப்பார்கள் .தமிழில்  பெரும்பாலும் Location Establishing மட்டுமே அந்த வகை காட்சிகளை எடுத்து இருப்போம் .ஆனால் கதாப்பாத்திர அறிமுகமே இந்த காட்சியில் இருந்து தொடங்கி இருப்பதால் ஒரு வித ஈர்ப்பை ஆரம்பித்திலேயே நாம் பெற்று விடுகிறோம் .இது தான் மேற்கத்திய பாணி .

முதல் காட்சியில் இருந்தே ரசிகர்களின்  கவனத்தை  ஈர்க்க தொடங்கி விடுவார்கள் .அப்படி கதையை தொடங்குவதால் ஒரு விதத்தில் நன்மை தான் எனினும் அடுத்த இரண்டு மணி நேரம் நீங்கள் முதல் காட்சிக்கு உழைத்ததை விட பத்து மடங்கு அதிகமாக  உழைக்க நேரிடும் .

காரணம் முதல் காட்சியில் அதிக எதிர்ப்பார்ப்பை உருவாக்கி வைத்து இருப்போம் .அடுத்த இரண்டு மணி நேரத்தில் அந்த எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் .அது தவறும் பட்சத்தில் ஒரு வித சலிப்பு தட்டி விடும் .உதாரணமாக Titanic படத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்ஜின்  அறையில் பிஸ்டன் சுழலும் அந்த ஒரு காட்சி கப்பலின் விஸ்தாரத்தை குறித்து மனதுக்குள்ளே ஒரு பிரமாண்டத்தை நாம்  உருவாக்கி கொள்வோம் .

உண்மையில் உங்கள் மனதை தயார்ப்படுத்த இதை போல slow -process காட்சிகள் மிகவும் இன்றியமையாதது .ஒரு விதத்தில் இது கட்டுமானம் போல சினிமா மொழியில் சொல்வதென்றால்  Build -up உருவாக்கி கொண்டே வர வேண்டும் . இந்த மாதிரி காட்சிகள் மூலம் தான் திரைக்கதை பலம் பெரும் .Dont Breathe படம் முழுக்க இப்படிப் பட்ட காட்சிகள் நிறைய இருக்கும் .உடைந்த ஜன்னலை ஆணி அடித்து மூடும் காட்சியில் நாயகனின் செயல் திறன்  உறுதியை இயக்குனர் பிரதிபலித்து இருப்பார் .

எந்த இடத்திலும் கண் பார்வை அற்றவர் என்ற இரக்கத்தை இயக்குனர் திணிக்க முயவில்லை .அடுத்து ஒரு திரைக்கதையின் இன்றியமையாத தேவை  எதிர்ப்பாராத நேரத்தில் எதிர்ப்பார்க்காத சம்பவம் நடக்க வேண்டும்.
அதையும் பூர்த்தி செய்து இருப்பார்கள் .எந்த இடத்திலும் LOGICAL MISTAKES -ஐ கண்டுப்பிடிக்காதப்படி திரைக்கதையில் Justify   பண்ண வேண்டும் .அதுவும் இந்த படத்தில் கடைப்பிடித்து இருப்பார்கள் .

அடுத்து ஒரு காட்சியில் மின்சாரத்தை நாயகன் துண்டிப்பார் .மற்ற படங்களில் இருள் போன்ற தோற்றத்தை ஏற்ப்படுத்த BLUE FILTER -ஐ பயன்ப்படுத்தி இருப்பார்கள் .இந்த இடத்தில் இயக்குனர் night mode போன்ற யுக்தியை பயன்ப்படுத்தி இருப்பார் .இது பார்க்கும் பொழுது நமக்கே ஒரு நிமிடம் பார்வை போனது போல மாயை ஏற்ப்படும் .

இவை அனைத்தும் சின்ன விஷயங்கள் போன்று தோன்றும் ஆனால் இந்த சின்ன சின்ன விஷயங்கள் தான் உங்கள் கதையை வலுவானதாக்கும் .

அடுத்து இந்த படத்தின் மொத்த வசனத்தையும் இரு பக்கங்களில் நிரப்பி விடலாம் .மூச்சு விட்டாலே இறந்து விடுவோம் என்ற நெருக்கடியில் வசனத்துக்கு ஏது வேலை ?மொத்தத்தில் இரண்டு மணி நேரம் உங்கள் மூச்சை நீங்களே யோசித்து தான் விடுவீர்கள் .

-இளமாறன்
   07/16/2017

Comments

Popular posts from this blog

திரைக்கதை அமைப்பது எப்படி ?

திரைக்கதையின் மாதிரி வடிவம் கிடைக்குமா ?

எது உலக சினிமா ?