BIG BOSS - உளவியல் தாக்குதல்



ஓவியாவை நேற்று மக்கள் கொண்டாடி தீர்த்து விட்டனர் .இந்திய அளவில் trending -ல் நேற்று ஓவியாவின் பெயர் பிரபலமானது .ஒரு புறம் சமுக ஆர்வலர்கள் இது கலாச்சார சீரழிவு என்று நிகழ்ச்சியை தவறாமல் பார்த்துக்கொண்டே எதிர்த்து வருகின்றனர் .மறுபுறம் பித்துபிடித்தவர்கள் போல் நிகழ்ச்சியை வெறித்தனமாக பார்க்கும் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது .

காட்சி ஊடகத்தின் வலிமை இது தான் .நேரடியாக உங்கள் உணர்வுகளுடன் விளையாடும் வல்லமை காட்சி ஊடகத்துக்கு உள்ளது .நீங்கள் என்ன சிந்திக்க வேண்டும் ,எவ்வாறு உணர்வை வெளிப்படுத்த வேண்டும் அனைத்தையும் தீர்மானிக்கும் சக்தி ,ஆற்றல் அனைத்தும் இந்த ஊடகத்துக்கு உண்டு .அதனால் தான் பொதுவெளியில் திரையிடும் படங்களுக்கு தணிக்கை வைத்து அரசு கண்காணிக்கிறது .

ஆனால் தொலைக்காட்சிகளுக்கு அந்த கட்டுப்பாடு கிடையாது .அதிகபட்சமாக IBF -ல் online வழியாக புகார் அனுப்பலாம் .இதை தவிர்த்து தொலைக்காட்சியை கட்டுப்படுத்த இந்தியாவில் வேறு வழி கிடையாது .அத்தனை சுதந்திரம் உள்ளது .அரசை குறித்து விமர்சிக்காமல் என்ன வேண்டுமானாலும் செய்துக் கொள்ளலாம் .மீறினால் தொலைக்காட்சி அலுவலகத்தில் ரெய்ட் நடக்கும் .

அடுத்து  BIG BOSS நிகழ்ச்சி தொடங்கிய புதிதில் பெரிய அளவு வரவேற்ப்பு ஒன்றும் கிடைக்கவில்லை .ஆனால் இன்று அதை தவிர்த்து வேறு எதையும் மக்கள் சிந்திக்காத வண்ணம் மக்கள் நிகழ்ச்சியினுள் அடங்கி போய் விட்டனர் .எப்படி இத்தனை ஆதரவு ?அங்கே தன் உளவியல் வேலை செய்கிறது .

 அடுத்த வீட்டினுள் என்ன நடக்கிறது என்று உங்களுக்கு தெரியாது .ஒரு வேலை சண்டை நடந்தால் எட்டி பார்ப்பீர்கள் .அவ்வளவு தான் நாம் அறிந்த அக்கம்பக்கம் .ஆனால் யார் கண்ணிலும் படாமல்  ஒரு வீட்டின் படுக்கையறை வரை சென்று அங்கே என்ன நடக்கிறது  என்று தெரிந்துக் கொள்ள உங்களால் முடியும் என்றால் செல்லாமல இருப்போம் ?அது தான் BIG BOSS .

நாம் உளவியலாக வேடிக்கை பார்க்க பழக்கப்பட்டு விட்டோம் .அனைத்தையும் வேடிக்கை பார்ப்போம் பின் அதைக் குறித்து விமர்சிப்போம் .இப்பொழுதும் நாம் அதையே தான் செய்கிறோம் .ஒரே நாளில் மெரினா ஜூலியை உயர்த்திப் பிடித்தோம் .இன்று BIG BOSS ஜூலியை கரைத்துக் கொட்டிக் கொண்டிருக்கிறோம் .

உங்களை சிந்திக்க விடாமல் அவர்கள் சிந்தனையை உங்களுக்குள் திணிப்பதே இந்த நிகழ்ச்சியின் வெற்றி .இரண்டு வாரம் முன்பு ஜூலியை வெற்றிப் பெற அரும்பாடு பட்டவர்கள் இன்று தோற்றக்கடித்தே தீர வேண்டும் என்று கொடி பிடிக்கிறோம் .உண்மையில் அது நம்முடைய சிந்தனை அல்ல .அவர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் கருவிகளாக நாம் மாறி விட்டோம் .

அடுத்த சில நாட்களில் ஓவியாவை  வெறுக்க வைக்கவும் அவர்களால் முடியும் .அது தான் ஊடக வலிமை .இப்பொழுது நிகழ்ச்சிக்கு  இலவசமாக ஒட்டு போடும்  நாம், நாளை ஓட்டுக்கு விலை நிர்ணயிப்பார்கள் அப்பொழுதும் பணம் கொடுத்து ஒட்டு போடுவோம் .ஏனென்றால் ஒரு கட்டத்தில் உங்கள் மூளை அவர்களுக்காக வேலை செய்ய தொடங்கி விடும் .

இப்பொழுதும் இந்த பதிவுக்கு ஓவியாவின் புகைப்படத்தை தான் வைக்க போகிறேன் .காரணம் அறியாமல் படத்தை பார்த்த உடனே Share செய்யும் அளவுக்கு நாம் வெறியேறி போய் உள்ளோம் .உங்கள் சிந்தனையை எப்பொழுது அவர்கள் திருடி விட்டார்களோ அப்பொழுதே அவர்கள் வெற்றிப் பெற்று விட்டனர் .
உண்மையில் நிகழ்ச்சியை குறை சொல்லவே முடியாது .இந்த அளவு ஆதரவு உள்ளதென்றால் அவர்களின் சிந்தனையும் ,உழைப்பும் மிக பெரியது .அதை நாம் மதிக்க வேண்டும் .

Comments

Popular posts from this blog

திரைக்கதை அமைப்பது எப்படி ?

திரைக்கதையின் மாதிரி வடிவம் கிடைக்குமா ?

எது உலக சினிமா ?