சுவாரசிய சினிமா - Jibeuro (Korean)
எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் அந்த துறையை பற்றிய அடிப்படை அறிவு இல்லாமல் நம்மால் எதுவும் புரிந்துக் கொள்ள முடியாது .ஆனால் பாமரனும் படித்தவனும் ஒரே அளவு கோளில் புரிந்துக் கொள்ள கூடிய காட்சி ஊடகம் சினிமா மட்டும் தான் .
மக்கள் தங்களை படத்தின் ஒரு அங்கமாக கருதியே திரையரங்கினுள் நுழைக்கின்றனர் .ஒரு குறுகிய பயணம் .அது சந்தோஷமா துக்கமோ .அதனுள் மக்களும் பயணிக்க எத்தனிக்கிறார்கள் .தங்கள் ஆன்மாவை திரையோடு கரைத்துக் கொள்ள தயார் நிலையிலேயே ஒவ்வொரு தனி மனிதனும் உள்ளே நுழைகிறான் .
கதை யாரை பற்றியது வேண்டுமானாலும் இருக்கட்டும் .நான் அவர்களோடு பயணிக்க தயார் .ஆனால் அழைத்து செல்ல திரையும் தயாராக இருக்க வேண்டும் .
விளாடிமிர் லெனின் சொல்கிறார் "உள்ள அத்தனை கலைகளை விட நமக்கு மிகவும் முக்கியமானது சினிமா "என்று .நூறு மேடை பேச்சுகளில் நிகழ்த்த முடியாத சாதனையை ஒரே ஒரு சினிமா செய்து முடித்து விடும் .காரணம் சினிமாவும் சமூகமும் ஒன்றை ஒன்று பார்த்து வளர்கிறது .இரண்டில் ஒன்று தவறு செய்தாலும் பாதிப்பு சமூகத்துக்கே .
இது தான் சினிமாவின் வலிமை ..சினிமாவை பார்த்து சமுகம் வளர்கிறது .கற்கிறது .பின் சுய பரிசோதனை செய்துக் கொள்கிறது .இப்படி நேரடியான தாக்கம் ஒரு மனிதனை பல வருடம் மூளை சலவை செய்தால் கூட வரவழைக்க முடியாது . சினிமா உண்மை பேச வேண்டும் ,சமகால அரசியல் பேச வேண்டும் ,வாழ்வியல் பேச வேண்டும் ,ஆனால் இது அத்தனையும் சினிமா மொழியில் பேச வேண்டும் .
Jibeuro ஒரு வயதான கிராமத்து பாட்டிக்கும் ,நகரத்தில் இருந்து விடுமுறைக்கு வரும் பேரனின் பற்றிய கதை .கொரியா சினிமாவில் உணர்வுகளை மிக ஆழமாக பதிவு செய்வார்கள் .காரணம் இயல்பிலேயே மிகவும் உணர்ச்சிவசப்பட கூடியவர்கள் .
கடைசியாக நீங்கள் எப்பொழுது அழுதீர்கள் என்று நினைவு இருக்கிறதா ?அப்படி ஓங்கி அழ வேண்டும் என்றால் இந்த படத்தை பாருங்கள் .உங்கள் உள்ளத்தை கீறி உங்கள் ஆழ் மனதை காயப்படுத்திவிடும் .அத்தனை யதார்த்தம் படம் முழுக்க உணர்வீர்கள் .
பாலு மகேந்திரா தலைமுறைகள் படத்தில் தாத்தா பேரன் உறவு முறையை கொஞ்சம் முயற்சித்து இருப்பார் .ஆனால் ஒரு உண்மையை நாம் உணர வேண்டும் உலக தரம் வாய்ந்த படங்கள் அனைத்தையும் நாம் எடுக்க முடியாது .எடுத்தாலும் இங்கே எடுப்படாது .
நம் மக்கள் ரசனை கொஞ்சம் வித்தியாசமானது .அவர்கள் ஒரே படத்தில் உள்ள அத்தனை உணர்ச்சிகளையும் பெற முயல்கிறார்கள் .கொஞ்சம் சிரித்து ,பின் அழுது ,கோபப்பட்டு ,பயந்து ஒரு கலவையான சினிமாவையே விரும்புகிறார்கள் .பரிசோதனை முயற்சியாக சீரியஸ் சினிமா வந்தாலும் மக்கள் அதற்க்கு இன்னும் தயாராக இல்லை என்பதை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும் .
இந்த படத்தை பாருங்கள் ,உணர்வை பெறுங்கள் .ஒரு போதும் இதைப் போன்ற ஒரு படத்தை தமிழில் எடுக்க முயற்சிக்காதீர்கள் .நம் சினிமா வேறு ,அவர்கள் சினிமா வேறு .
Comments
Post a Comment