Up- Dated ஆக இருங்கள் .
மக்கள் ரசனை நொடிக்கு நொடி மாறிக்கொண்டே வரும் .அதற்க்கு ஏற்றார்போல் திரைப்படமும் மக்களின் ரசனை அறிந்து எடுக்க முற்ப்படுகின்றனர்.ஆனால் பெரும்பாலும் இது தோல்வியில் முடிவதற்கு
காரணம் இங்கே வியாபாரம் படத்தின் தரத்தைக் குறித்து கவலைப்படாமல் நாயகனின் முந்தைய படத்தின் வெற்றி ,இயக்குனரின் முந்தைய படத்தின் வெற்றி இது இல்லாமல் நாயகன் இயக்குனரின் கூட்டணி இப்படி பல பிரபலமான(!) யுக்திகளை இங்கே கையாளுகிறார்கள் .
உண்மையில் மக்கள் தெரிந்த நாயகனின் படத்துக்கு முக்கியத்துவம் தருகிறார்கள் தான்.ஆனால் படத்தின் தரம் என்பது உள்ளே சென்ற பின் இளிக்க தொடங்கி விடுகிறது.இதற்க்கு பெரிய காரணம் திரைக்கதையின் மேல் அக்கறை செலுத்தாமல் வெறும் நல்ல சீன்கள் மட்டும் படத்தில் இருந்தால் போதும் என நினைப்பது படங்கள் தோற்ப்பதற்கு பெரும் காரணமாக அமைகின்றன .
அடுத்து கதைக் குறித்து விவாதிக்கும் பொழுது எல்லாம் இங்கே ஒரே வித Template -ஐ கடைப்பிடிக்கிறார்கள் .அது சமிபத்தில் எந்த படம் வெற்றி பெற்றதோ அதே விதமான பாணியை பின்பற்ற முயல்கிறார்கள் .ஒரு படைப்பு இங்கயே தோற்று விட்டது .தனி திறன் தான் ஒரு படைப்புக்கு உரிய அந்தஸ்த்தை பெற்று தரும் .அதை இழக்கும் பொழுது மக்கள் நிராகரிக்க தொடங்கி விடுவார்கள் .
உண்மையில் இங்கே திரைக்கதையின் மீது பெரிய விழிப்புணர்வு எல்லாம் கிடையாது .நினைத்ததை எல்லாம் எடுத்துவிட முயல்கிறார்கள் குறை சொன்னால் படைப்பில் தலையிட கூடாது என்பார்கள் .உண்மையில் பல கோடி கொட்டி எடுக்கும் படம் ஓடுமா ஓடாத என்பதை திரைக்கதை தான் முடிவு செய்யும் .சிறந்த கதைகள் தோற்றது உண்டு .சிறந்த திரைக்கதைகள் தோற்காது .
Hollywood இல் இதற்க்கு என்று தனியாக திரைக்கதை தணிக்கை நபர் இருப்பார் .அவர் தான் கதையை Production -க்கு பரிந்துரை செய்வார் .இங்கே அப்படி என்றால் என்ன என்பார்கள் .Producer தான் இங்கே Screenplay Analyst ஆக உள்ளார் .உண்மையில் பல கோடி இழப்பதற்கு முன் ஒரு திரைக்கதை ஆசிரியரிடம் உங்கள் கதையை மெருகேற்றுவது பெறும் நஷ்டத்தை தவிர்க்கலாம் .
அடுத்து சினிமா தன்னை அறியாமல் சமகாலத்தை பதிவு செய்துக் கொண்டே இருக்கிறது .நாளுக்கு நாள் மக்கள் வேகமாக இயங்கி கொண்டே இருக்கின்றனர் ,அறிவியலும் ,மருத்துவமும் போட்டிபோட்டு வளர்ந்து வருகிறது .இந்த சூழலில் ஒரு இயக்குனர் தன்னை UP-DATE ஆக வைத்துக் கொள்ளவில்லை என்றால் நீடிப்பது கஷ்டம் .மக்கள் OUT -DATED ஆகுவது கிடையாது .காரணம் அவர்கள் இந்த சுழற்சியை இயக்கிக்கொண்டே தானும் இயங்குகின்றனர் .
அவர்களிடத்தில் நாம் பழைய பஞ்சாகத்தை பாட முடியாது .பெரிய உதாரணம் பாரதிராஜா ,பாக்யராஜ் போன்ற ஜாம்பவான்கள் Field -out ஆகி விட்டனர் .காரணம் அவர்களுக்கு சமகால சினிமா புரியவில்லை .ஆனால் ஹாலிவுட்டில் இயக்குனர்கள் வயதாக வயதாக சிறந்த படங்களை எடுக்கின்றனர் .clint Eastwood,Martin Scorsese என அவர்கள் வரிசை நீண்டுக் கொண்டே போகிறது . காரணம் அங்கே இயக்குனர்கள் தங்களை புதுப்பித்துக் கொண்டே இருக்கின்றனர் .
தொழில்நுட்ப ரீதியாக மட்டுமல்லாமல் சமகால மக்கள் வாழ்வுக் குறித்தும் அவர்கள் UP-Date ஆக உள்ளனர் .அதனால் மட்டுமே இன்னும் அவர்களால் தாக்குப்பிடிக்க முடிகிறது .நாம் இன்னும் அறை எடுத்து கதை வளர்த்துக் கொண்டு இருக்கிறோம் .Tarantino அவரின் கதையை சமூகத்திடம் இருந்து தான் எடுக்கிறேன் என்பார் .
ஆக மக்கள் ரசனை என்பது அவர்களின் சமகால வாழ்வியலோடு தொடர்ப்புடைய படங்கள் மேல் அதிக அக்கறை செலுத்துக்கின்றனர் .அவர்கள் வாழ்வியலுக்கும் திரைக்கும் தொடர்பு இல்லாமல் இருந்தால் கொஞ்சமும் யோசிக்காமல் புறந்தள்ளி விடுகின்றனர் .
Comments
Post a Comment