திரைக்கதை எளிது



இணையம் வழியாக நம்மிடம்  திரைக்கதை பயிலும் நண்பர் ஒருவர் கேட்ட கேள்வி , கதையின் முடிவை முன்னரே அறிந்து வைப்பது எதற்காக ?நாம் ஏன் கதையை அதன் போக்கில் விட கூடாது ?புது புது சிந்தனை கிடைக்கும் அல்லவா ?அதை கதையில் கொண்டுவருவது நல்லது தானே என்று .

உண்மையில் நாம் ஒரு கதையை தொடங்கும்போது முடிவு குறித்து எல்லாம் சிந்திப்பது இல்லை .கதை நம்மை எங்கு  இட்டு செல்கிறதோ அங்கே நாமும் செல்வோம் .நீங்கள் கதையை முடிக்கும் பொழுது நம் எதிரே நான்குக்கும் அதிகமான climax இருக்கும் .அதை தேர்ந்தெடுப்பது உண்மையில் கடினம் .காரணம் நீங்கள் climax காட்சியை மாற்றினால் முதல் காட்சியை மாற்ற நேரிடும் .

அதனால் முதலில் climax குறித்து சிந்தித்த பின் எழுத தொடங்குங்கள் .முடிவு இது தான் என தெரிந்த பின் எழுதுவது மிக சுலபமாக இருக்கும் .கதையின் கிளை பிரிவுகள் தானாக விரிய தொடங்கும் .பின்னோக்கி செல்வதால் நீங்கள் நினைத்த மாதிரி எல்லாம் எழுத முடியாது .கதை ஒரு கட்டுக்குள் அடங்கி விடும் .

சுப்ரமணியபுரம் திரைப்படத்தை எடுத்துக்கொள்ளுங்கள் .முதல் காட்சி கஞ்சா கருப்புவை கொலை செய்வதில் இருந்து தொடங்கும் .ஏன் கொலை நடந்தது என்று தெரிந்துக் கொள்ள நம்மை 27 ஆண்டுகள் பின்னோக்கி அழைத்து சென்று இருப்பார் .படத்தின் ஆரம்பித்திலேயே முடிவு தெரிவதால் ரசிகர்களும் ஒரு வித ஈர்ப்புடன் பார்க்க தொடங்குவார்கள் .

உண்மையில் கதையின் முடிவு இயக்குநருக்கு முன்னரே தெரிந்து இருக்கும் .அதனால் தான் எந்த இடத்திலும் கதை தங்குதடையில்லாமல் செல்கிறது .கொலை செய்யப்பட்ட நபர் யார்? அவர்களின் பின்னணி என்ன ? எதற்காக இத்தனை ஆண்டு கழித்து இந்த கொலை நடக்க வேண்டும் ?இப்படி பல கேள்விகளுக்கு முடிவு அறிந்து வைத்து இருந்தால் மிக எளிமையாக திரைக்கதையை வடிவமைத்துக் கொண்டே போகலாம் .

மதராசாபட்டினம் படமும் இதே வகையில் தொடங்கும் .சென்னையில் தான் வாழ்ந்த இடத்தை பார்க்க விரும்பும் மூதாட்டியின் கதை .யார் அந்த மூதாட்டி ?இந்தியா ஏன் செல்ல வேண்டும் ?இத்தனை ஆண்டு கழித்து இந்தியா செல்ல வேண்டிய தேவை என்ன ?சரி அங்கு யாரை பார்க்க போகிறார் ?பார்த்தாரா இல்லையா என்பது போன்ற கேள்விகளுக்கு  திரைக்கதை விடை அளித்துக் கொண்டே போகும் .ஆனால் முடிவு முன்னரே தெரிந்து வைத்தால் மட்டுமே உங்களால் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும் .

சரி இப்பொழுது உங்களிடம் என்ன கதை இருக்கிறது என்று சிந்தியுங்கள் .அது காதல் பற்றியோ ,வஞ்சம் தீர்ப்பது பற்றியோ ,நாயகன் வெற்றிப் பெறுவது பற்றியோ எது வேண்டுமானாலும் இருக்கலாம் .ஆனால் இறுதியில் என்ன ஆகும் என்பது உங்களுக்கு தெரிந்து இருக்க வேண்டும் .அப்படி தவறும் பட்சத்தில் ஒரே இடத்தில் சுற்றிக் கொண்டே இருப்போம் .

கட்டாயம் கதையை இப்படி தான் தொடங்க வேண்டும் என்பது எல்லாம் கிடையாது .இப்படி தொடங்கினால் எளிமையாக இருக்கும் .


Comments

Popular posts from this blog

திரைக்கதை அமைப்பது எப்படி ?

திரைக்கதையின் மாதிரி வடிவம் கிடைக்குமா ?

எது உலக சினிமா ?