படத்தில் பாடல் எப்பொழுது வெற்றி பெறுகிறது ?




தமிழ் சினிமாவையும் பாடல்களையும் பிரித்துப்பார்க்க பார்க்க முடியாது .உண்மையில் மக்கள் பாடல்கள் மட்டுமே கேட்பதற்கு திரையரங்கிற்க்கு வந்த காலமும் உண்டு .அந்த அளவிற்கு மக்கள் வாழ்வில் பாடல்கள்  பின்னிபினைந்துள்ளது .ஆனால் பாடல் ஏன் படத்தில் வரவேண்டும் ?பாடலுக்கும் படத்திற்கும் என்ன தொடர்ப்பு உண்டு ?திரைப்பட காட்சிகள் கூட ஓரளவிற்கு நாம் வாழ்வோடு ஒத்துப் போக கூடியது தான் .ஆனால் பாடல்கள் ?நம் நிஜத்தில் அவ்வாறு பாடுகிறோமா என்ன ?ஏன் பாடல் வரவேண்டும்

இதை தெரிந்துக்கொள்ள நாம் சற்று பின்னோக்கி செல்ல வேண்டும் .நாடகத்தில் பாடியதால் அதை தழுவி திரைப்படத்திலும் பாடல்கள் வெளிவந்தது .அவ்வாறு வெளிவந்த பாடல்கள் பெரும்பாலும் கதையை மையப்படுத்தியே வந்தது .நீளமான வசனங்கள் பேச வேண்டிய இடத்தில் பாடல்கள் அந்த இடத்தை  நிறைவு செய்தது .உண்மையில் தமிழ் சினிமாவில் பாடல்கள் வந்த காரணம் இது தான் .

மற்ற மாநில மொழி படங்களிலும் பாடல்கள் வருவதற்கும்  தமிழ் சினிமா தான் பெரிய காரணம் .காரணம் இந்திய சினிமாவின் ஆரம்பகாலம் சென்னையில் தான் தொடங்கியது .அதனால் இங்கு எடுக்கப்படும் படத்தின் தாக்கம் இந்தியாவெங்கும் எதிரொலித்தது .அடுத்து வந்த காலங்களிலும் இது தொடர செய்தது .

அடுத்து இப்பொழுது போல் நினைத்த மாத்திரத்தில் பாடல்களை கேட்க்கும் வசதி அப்போது இல்லாத காரணத்தினால் இசை என்பது தனி தொழிலாக வளர தொடங்கியது .ஒரு படத்தின் இசை பிரபலமானால் அந்த படமும் வெற்றி பெரும் என்ற நிலை உருவான காலம் .உண்மையில் இசையமைப்பாளர்களுக்கு மரியாதை தொடங்கிய காலமும் அது தான் .கூடவே பாடலாசிரியரும் பிரபலமான நேரம் அது .

அறிவியலின் அசூர வளர்ச்சி .புறசூழ வாழ்வியல் மாற்றம்  நிகழ தொடங்கிய நேரம் அனைத்தும் மாறிக்கொண்டே வந்தது . ஆனால் இப்பொழுதும் படத்தில் பாடல் கட்டாயம் வைத்தே ஆக வேண்டும் என்ற நிலை சற்று சிந்திக்க வேண்டிய விஷயமாக உள்ளது .பாடல்கள் இல்லாத படங்கள் ஒன்று இரண்டு வந்தாலும் கூட அது ரசிகர்களுக்கு ஏனோ பெரிய மன நிறைவை தருவது இல்லை .

இப்பொழுது வந்த படத்தில் உங்களை மிகவும் கவர்ந்த பாடல் எது என்று கேட்டால் நாம் அனைவரும் முழிப்போம் .காரணம் எதுவும் நம் மனதோடு ஒன்றுவதில்லை .முன்னர் சொன்னது போல் பாடல் வெறும் சத்தங்கள் மட்டும் அல்ல அது நம் உணர்வோடு பயணிக்க கூடிய ஒன்று .சரியான நேரத்தில் சரியான இடத்தில் பாடல் வரும் பொழுது யாரும் இருக்கையை விட்டு எழுவது கிடையாது .

படையப்பா படத்தில் வந்த அத்தனை பாட்டுகளும் படத்தோடு ஒன்றி இருக்கும் .குறிப்பாக வெற்றிக்கொடிகட்டு பாடல் தொடங்கும் நேரம் நாம் அனைவரும் வெறியேறி இருப்போம் .இது தான் உண்மையில் படங்களில் பாடல்களுடைய வேலை .

ஒரு பெரிய கால இடைவெளியை நிரப்புவதற்கு காட்சியோ ,வசனமோ கைகூடாத நேரத்தில் இசை அந்த வெளியை நிரப்பும் .ஒரு காதல் வலியை ,பிரிவை ,துக்கத்தை ,சந்தோஷத்தை இசை நிரப்பும் .ஆனால் சரியான சூழலில் இசைக்கப்படும் பாடல் மக்கள் கவனத்திற்கு வருகிறது .

நாடோடிகள் திரைப்படத்தில் சம்போ சிவா சம்போ தொடங்கும் நேரம் அனைவரும் இருக்கையின் நுனியில் இருந்தனர் .அந்த இடத்தில் நீங்கள் எதை கொண்டும் நிரப்ப முடியாது பாடலை தவிர .இது தான்  உண்மையில் பாடலின் வேலை .

ஒரு பெரிய காலசக்கரத்தை ஐந்து நிமிடங்களில் சுழல இசை போதுமானது .ஆனால் இப்பொழுது பாடல் எதற்கு வருகிறதென்றே தெரியாமல் இருக்கிறது .மக்களும் சூழலுக்கு சம்மந்தம் இல்லாத நேரத்தில் பாடல்கள் வந்தால் பெரிதும் கவனத்தில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள் .

பாடல்கள் நிச்சயம் படத்தில் இடம் பெற வேண்டும் .ஆனால், அவை அந்த இடத்திற்கு கட்டாயம் தேவையென்றால் மாத்திரமே வைக்க வேண்டும் .பெரிய இசையமைப்பாளர் இசைத்த பாடல் என்பதற்காக எல்லாம் மக்கள் அமர்ந்து கேட்க மாட்டார்கள் .கதையின்  சூழலை மெருகேற்ற பயன்பட வேண்டிய பாட்டை இப்பொழுது சீர்க்குலைத்து கொண்டு இருக்கிறோம் .

Comments

Popular posts from this blog

திரைக்கதை அமைப்பது எப்படி ?

திரைக்கதையின் மாதிரி வடிவம் கிடைக்குமா ?

எது உலக சினிமா ?