சுவாரசிய சினிமா - UNBROKEN



உண்மையில் நம் வாழ்வில் திரைப்படங்களின் பங்கு அளப்பறியது .ஒரு வேலை இந்த ஒரு ஊடகம் மட்டும் இல்லாமல் போய் இருந்தால் மனித வாழ்வின் மேம்பாடு குறித்து சிந்திக்கவே முடியாது .பல படங்கள் தரம் இல்லாமல் எடுப்பதால் ஒட்டுமொத்த திரைப்படங்களை நாம் குறை சொல்ல முடியாது .சில படங்கள் உண்மையில் உங்கள் வாழ்வை புரட்டிப் போட கூடிய வல்லமை பெற்றவை .

உங்கள் உடல் ,உள்ளம் அனைத்தும் சோர்ந்து போய் வாழ்வே கேள்வி குறியாய் உள்ளதா ?துக்கம் மட்டுமே உங்கள் வாழ்வை சூழ்ந்து உள்ளது போல் உணர்கிறீர்களா ?மகிழ்ச்சி என்றுமே உங்கள் வாழ்வில் எட்டி பார்க்கவே பார்க்காது என்று முடிவு எடுத்து உடைந்து போய் விட்டீர்களா ?
ஆம் என்றால் உங்களுக்கு தான் இந்த படம் .

உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்த படம் பிரபல நடிகை Angelina Jolie யால் இயக்கப்பட்டது .இரண்டாம் உலக போரில் ஜப்பான் மீது குண்டு வீச செல்லும் விமானம் இயந்திர கோளாறால் கடலில் விழுந்து நொறுங்குகிறது .கடலில் 47 நாட்கள் உயிர் பிழைத்து பின் ஜப்பான் இராணுவத்தால் கைது செய்யப்படும் நாயகனுக்கு  இறுதியில் என்ன ஆகிறது என்பதே கதை .

ஒரு மனிதன் உண்மையில் நொறுங்கி போய் இருக்கும் சூழலில் யாராவது நம்மை தேற்ற வரமாட்டார்களா என்று ஏங்குவோம் .விழும் நேரமெல்லாம் மீண்டு எழுவதே மனித குணம் .இந்த போராட்ட குணம் தான் இன்னும்  இந்த இனத்தை  மண்ணில் வாழ செய்கிறது .

புத்தகம் ஒரு மனிதனை உருமாற்றும் என்பது எத்தனை சாத்தியமோ அதைவிட  அதிக சாத்தியம் ஒரு திரைப்படம் மனிதனை மேம்படுத்தும் என்பது .ஆம் உண்மையில் ஒரு படைப்பு உங்களை உலுக்க வேண்டும் ,உறங்க விடமால் செய்ய வேண்டும் ,புதிய சிந்தைனையை உங்களுள் விதைக்க வேண்டும் .இது தான் அந்த படைப்பின் வெற்றி .

நாம் அடிக்கடி சொல்வது போல் திரைப்படம் வெறும் பொழுதுப்போக்கு ஊடகம் அல்ல .அது அணுவை விட ஆற்றல் வாய்ந்தது .நொடிபொழுதில் உங்கள் உள்ளதை உறைய வைக்கும் ,சிரிக்க வைக்கும் ,சிந்திக்க வைக்கும் .இப்படி பன்முக தன்மையுடையது .

இந்த படத்தை பார்த்த பிறகு உங்களுக்குள் ஒரு புதிய மாற்றத்தை உணர்வீர்கள் .நீங்கள் படும் துயரெல்லாம் ஒன்றுமே இல்லை என்ற அளவுக்கு உங்கள் உள்ளம் உறுதி பெறும் .சோர்ந்த உள்ளங்கள் களிப்படையும் .உடைந்த உள்ளங்கள் உற்சாகம் கொள்ளும் .இழந்த அனைத்தையும் பெறும் ஆற்றல் உங்களுக்குள் மேலோங்கும் .

ஆம் உண்மையில் இது தான் ஒரு படைப்பின் வெற்றி .நாயகன் விழும் பொழுது உங்களுக்குள் ஒரு பரிதவிப்பு வரவேண்டும் .அவன் எடுக்கும் முயற்சியில் நீங்களும் பங்குபெற வேண்டும் .அவன் வெற்றிப் பெரும் பொழுது நீங்கள் அவனை கொண்டாட வேண்டும் .கொண்டாட தயாராகுங்கள் .

Comments

Popular posts from this blog

திரைக்கதை அமைப்பது எப்படி ?

திரைக்கதையின் மாதிரி வடிவம் கிடைக்குமா ?

எது உலக சினிமா ?