சுவாரசிய சினிமா - Men Of Honor (English )




அமெரிக்காவை என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள் .தன் சொந்த நாட்டின் கருத்து சுதந்திரத்தில் எப்பொழுதும் மூக்கை நுழைத்தது இல்லை .இன்றும் அந்த தேசம் வளர்ந்துக் கொண்டே இருப்பதற்கு காரணம் தவறுகளை திருத்தி கொள்கிறது புதிய சிந்தனைகளை உள்வாங்கிக்கொண்டு தன் கட்டமைப்பை மேலும் உறுதிப் படுத்திக் கொள்கிறது .வெளியுறவு கொள்கைகள் எப்படியோ ஆனால் சொந்த நாட்டு மக்களின் நலன் சார்ந்து சிந்திப்பதில் அவர்களுக்கு நிகர் அவர்கள் தான் .

இந்தியாவின் சாதிக் கொடுமையை விட ஒரு படி மேலான கொடுமையை அங்கே கருப்பர்கள் அனுபவித்தார்கள் .கறுப்பர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது ,அடிப்படை உரிமை அனைத்தையும் இழந்து மிக பெரிய அடிமை சமுகம் வளர்ந்துக் கொண்டு இருந்தது .

ஒரு கட்டத்தில் அமெரிக்கர்களே இதை உணர ஆரம்பித்தார்கள் .சக மனிதனை மதிக்கும் பண்பு மக்களிடம் மேலோங்கியது .நம் நாட்டு சாதி தலைவர்கள் போல அல்லாமல் இன விடுதலை என்பது தேசத்தின் வளர்ச்சிக்கான விடுதலையாக பார்த்ததின் விளைவு இன்று நாம் அண்ணாந்து பார்க்கும் தேசமாய் அமெரிக்கா உள்ளது .

Men of Honor திரைப்படமும் ஒரு கருப்பரை பற்றி தான் .வெள்ளையர்கள் நிறைந்த இடத்தில் எப்படி ஒரு கறுப்பின இளைஞன் முன்னேறி உச்சத்தை அடைகிறான் என்பதே கதை .

முன்னர் சொன்னது போல் அமெரிக்காவின் கருத்து சுதந்திரம் போற்றுதலுக்கு உரியது .அடிமைப்படுத்திய ஒரு சமூகத்திடம் நீங்கள் எங்களுக்கு இழைத்த அநீதியை பார்த்தீர்களா ?என்று படைப்பின் மூலம் குற்றம் சாட்டுவதற்கு தைரியம் வேண்டுமென்றால் ,ஆம் நாங்கள் இழைத்தது தவறு தான் என்று ஏற்றுக்கொள்வதற்கு எத்தனை பக்குவம் வேண்டும் .அது தான் அமெரிக்கா .

இந்தியாவில்  தனி மனிதனின் வெற்றி ஒரு சமுகத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது உடனே அந்த வெற்றியை விட வெற்றி பெற்றவன் எந்த சாதி என்று தேட ஆரம்பித்து விடுவார்கள் .ஆனால் அமெரிக்காவில் ஒவ்வொரு தனி மனிதனின் வெற்றியும் தேசத்தின் வெற்றியாக பார்க்கப்படுகிறது .

படத்தில் நாயகனின் அப்பா நாயகனிடத்தில் சொல்வார் ''கடினமாக ஆகும் பொழுது ,உன் உழைப்பை அதிகப்படுத்து பின் வாங்கி விடாதே "என்று .இதை தன் வாழ் நாள் முழுவதும் செயல்ப்படுத்துவான் நாயகன் .

உங்கள் வாழ்வில் உற்சாகம் இழந்து ,எதிர்காலம் தெரியாமல் சோர்ந்து போய்  உள்ளீர்களா ?இந்த படத்தை ஒரு முறை பாருங்கள் .படத்தை குறித்து எந்த ஆராய்ச்சியும் நடத்தாதீர்கள் திறந்த மனதுடன் பாருங்கள் .Feel good Movie.


Comments

Popular posts from this blog

திரைக்கதை அமைப்பது எப்படி ?

திரைக்கதையின் மாதிரி வடிவம் கிடைக்குமா ?

எது உலக சினிமா ?