வெற்றிப் பெற்ற படங்கள் பல நிராகரிக்கப்பட்டவையே .



புகழ்ப் பெற்ற பல படங்களின் திரைக்கதை தயாரிப்பாளர்களால் நிராகரிக்கப்பட்டவையே .இதற்க்கு இரண்டு காரணங்கள் உண்டு ஒன்று அதற்கு முன் வந்த வெற்றித் திரைப்படங்கள் போலவே கதையமைப்பை எதிர்ப்பார்ப்பார்கள் .இரண்டாவது தன் எதிர்ப்பார்ப்பை கதையின் மேல் திணிக்கப் பார்ப்பார்கள் .

ஒரு படைப்பாளியின்  உலகம் தயாரிப்பாளரின் உலகத்தில் இருந்து முற்றும் மாறுப்பட்டவை.படைப்பாளியின்  சிந்தனை எங்கே சுற்றினாலும் அவனின் படைப்பு முழுவதும் சமுகத்தை ஒட்டியே அமையும் .சமுகத்தின் தலையாய பிரச்சனை குறித்தே அவனின் சிந்தனை ஓட்டம் இருக்கும் .

கோபம் ,அழுகை ,சிரிப்பு ,சந்தோசம் அனைத்தையும் அவன் வாழும் சமூகத்திடம் இருந்தே எடுத்துக் கையாள்வான் .பெரும்பான்மை  சமுகத்தின் நாடித்துடிப்பு அவன் அறிந்து அதனை கதையினுள் கொண்டு வரவே முனைவான் .இதனை elite சமுகத்தில் வாழும் தயாரிப்பாளர்கள் அறிந்துக் கொள்ள வாய்ப்பு  இல்லை .

ஒரு சாமானியனின் போராட்டமே மக்கள் தங்களின் வெற்றியாக கருதுகிறார்கள் .அது இயேசு காலம் தொடங்கி காந்தி காலம் வரை எளிய மனிதனின் வெற்றியே சமுகத்தின் வெற்றியாக அடையாளம் கொள்ளப்படுகிறது .ஏனென்றால் பெரும்பான்மை மக்கள் இங்கே எளியவர்கள் தான் .உங்கள் கதைக் களம் எளியவர்களைப் பற்றியே இருக்கட்டும் .

இதை சொல்வதற்கு காரணம் தயாரிப்பாளரின் சிந்தனை .அவர் வாழும் சமுகம் அனைத்தும் வெகுஜன மக்களிடம் இருந்து அந்நியப்பட்டு  வேறு ஒரு கிரகத்தில் வாழ்பவராக இருப்பார் .அவரிடம் உங்கள் கதையை விளக்குவது இருட்டுக்கு வெள்ளையடிப்பதற்கு சமம் .சினிமா மொழி தெரியாதவர்களிடம் நீங்கள் கதை சொல்ல செல்லாதிர்கள் .

மிக முக்கியாமான ஒன்று உங்கள் எண்ணத்தில் இருக்கும் காட்சியை எழுத்தில் கொண்டு வர முயற்சி செய்யாதிர்கள் .அது காட்சியாகவே உங்கள் எண்ணத்தில் வளரட்டும் .dialogue மட்டும் எழுதிக் கொள்ளுங்கள் .விவரனை வேண்டாம் .அந்த காட்சியின் அழகியலை கொலை செய்து பலர் தயாராக இருப்பார்கள் .

அடுத்து உங்கள் படைப்பு புரியவில்லை என்றால் வருத்தம் கொள்ளுங்கள் பிடிக்கவில்லை என்றால் கொஞ்சமும் கவலை கொள்ளாதிர்கள் .உங்கள் படைப்பு product -ஆக வெளி வரும் வரை  உங்களை தவிர வேறு எவராலும் யூகிக்க முடியாது .அப்படி யூகிக்கவும் கூடாது .அது தான் படைப்பின் வெற்றி .

ஒரு படைப்பாளியாக உங்கள் படைப்பு நிராகரிக்கப்பட்டால் மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ளுங்கள் .ஏனென்றால் வெற்றிப் பெற்ற படங்கள் பல நிராகரிக்கப்பட்டவையே !!!!


Comments

Popular posts from this blog

திரைக்கதை அமைப்பது எப்படி ?

திரைக்கதையின் மாதிரி வடிவம் கிடைக்குமா ?

எது உலக சினிமா ?