மிகை நடிப்பு vs நிஜ நடிப்பு
நண்பர் ஒருவர் அலைபேசியில் அழைத்து இருந்தார் .பேசிக்கொண்டு இருக்கையில் நாடகம் தான் திரைப்படத்தை விட உயர்ந்தது என்றும் ,உண்மையான நடிகன் நாடகத்தின் வாயிலாக தான் முழுமை பெறுவான் என்று வாதம் புரிந்தார் .சினிமா நடிப்பின் ஆன்மாவை அழித்து விட்டதாகவும் கடுமையான விவாதம் புரிந்தார் .எதிர் விவாதம் புரிய புறசூழல் அனுமதிக்கவில்லை . ஆனால் உண்மையில் இது மிக முக்கிய கேள்வி .நாடக நடிப்புக்கும் ,திரை நடிப்புக்கும் உள்ள வேறுப்பாடு ,வளர்ந்த விதம் ,மக்கள் எந்த கண்ணோட்டத்தில் இதை பிரித்திப் பார்க்க தொடங்கினர் ,என்பதை விளக்க வேண்டிய கட்டாயம் உள்ளது . ஐரோப்பாவில் நாடகம் தொடங்கப்பட்ட காலம் முதல் அது நில பிரபுத்துவ கைப்பிடியில் இருந்தது .உழைக்கும் மக்கள் நாடகத்திற்கு செல்லும் அளவிற்கு பொருளாதாரம் இடம் கொடுக்கவில்லை .ஆகையால் நாடகம் வெகுஜன ஊடமாக வளரவில்லை .பணக்காரர்கள் பொழுதுபோக்க தங்கள் அந்தஸ்த்தை வெளிப்படுத்த நாடகம் அவர்களுக்கு உதவியது . வெகுஜன மக்களும் நாடகம் பார்க்க தொடங்கிய காலத்தில் அவர்களால் ஒன்ற முடியவில்லை .காரணம் பல நேரத்தில் அரங்கம் முக்கிய பிரமுகர்களுக்காக காத்துக் இருந்தது .சில சமயம் அவர்கள