சுவாரசிய சினிமா - BARAN
மனித வாழ்வு போராட்டத்திற்கு உட்பட்டது .அனைவரும் ஏதாவது ஒரு தேவையை நோக்கி போராடி கொண்டே இருப்பார்கள் .ஆனால் பொதுவான போராட்டமாக இதுவரை மனித குலம் சந்தித்து வருவது வாழ்வதற்க்கான போராட்டம் தான் .உயிருடன் இருக்க உணவு வேண்டும் .உணவு கிடைக்க பணம் தேவை .வேலை செய்யாமல் பணம் கிடைக்க வாய்ப்பு கிடையாது .அதனால் எந்த வேலையாவது செய்து இந்த உலகில் தன்மானத்துடன் உயிர் வாழ மனித இனம் தொடர்ச்சியாக பாடுபட்டு கொண்டு இருக்கிறது .
ஈரானிய சினிமா எப்பொழுதும் மனித வாழ்வை குறித்தே எடுக்கப்படுகிறது. ஒரு நாட்டை குறித்து நாம் தெரிந்து கொள்ள பெரிதும் உதவுவது அந்த நாட்டின் இலக்கியம் தான் .பாமர மக்கள் இலக்கியம் பழக வாய்ப்பு இல்லை ஆதலால் சினிமா தான் ஒரு நாட்டின் பண்பாட்டை குறித்தும், கலாச்சாரத்தை குறித்தும் பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருக்கிறது .அதை சரியாக பயன்படுத்திக்கொண்ட நாடு ஈரான் .
நம் சினிமா போல் கொண்டாட்ட சினிமா அங்கு எடுப்பது இல்லை.தொடர்ந்து நடந்த போரின் தாக்கம் .மத கட்டுப்பாடு ,பொருளாதார நெருக்கடி ,இதையும் தாண்டி தரமான திரைப்படம் எடுக்க முடிகிறது என்றால் சினிமாவை அவர்கள் ஆழமாக நேசிப்பது தான் காரணம் .
பெரிய கதைக்களத்தை அவர்கள் தேர்ந்தெடுப்பது இல்லை .பெரிய தொழில்நுட்பமும் அவர்களிடத்தில் இல்லை .ஆனால் இன்றுவரை உலகின் அதி உன்னத திரைப்படங்களை அவர்களே வழங்குகிறார்கள் .காரணம் மக்களின் வாழ்வு தான் அவர்களின் கதைக்களம் .
மஜித் மஜீத் இரானின் தவிர்க்க முடியாத இயக்குனர் .ஈரானின் புவியியல் அமைப்பையும் ,ஈரான் மக்களின் வாழ்வியலையும் எதார்த்தமாக பதிவு செய்பவர் .BARAN திரைப்படத்திலும் அவரின் ஆளுமையை பதிவு செய்து இருப்பார் .
ஒரு வரி கூட இந்த படத்தின் கதையை குறித்து எழுத போவது இல்லை .ஏனென்றால் நீங்கள் பார்த்து அனுபவிக்க வேண்டிய படம் இது .படத்தின் ஒளிப்பதிவு காட்சிக்கு காட்சி உங்களை பரவசப்படுத்தும் .படத்தில் திரைக்கதை விறுவிறுப்பாக இருக்காது .ஆனாலும் ஆனந்தப்படுத்தும் அழகியல் இந்த திரைப்படத்தில் உள்ளது .நிச்சயம் பாருங்கள் .
Comments
Post a Comment