மிகை நடிப்பு vs நிஜ நடிப்பு
நண்பர் ஒருவர் அலைபேசியில் அழைத்து இருந்தார் .பேசிக்கொண்டு இருக்கையில் நாடகம் தான் திரைப்படத்தை விட உயர்ந்தது என்றும் ,உண்மையான நடிகன் நாடகத்தின் வாயிலாக தான் முழுமை பெறுவான் என்று வாதம் புரிந்தார் .சினிமா நடிப்பின் ஆன்மாவை அழித்து விட்டதாகவும் கடுமையான விவாதம் புரிந்தார் .எதிர் விவாதம் புரிய புறசூழல் அனுமதிக்கவில்லை .
ஆனால் உண்மையில் இது மிக முக்கிய கேள்வி .நாடக நடிப்புக்கும் ,திரை நடிப்புக்கும் உள்ள வேறுப்பாடு ,வளர்ந்த விதம் ,மக்கள் எந்த கண்ணோட்டத்தில் இதை பிரித்திப் பார்க்க தொடங்கினர் ,என்பதை விளக்க வேண்டிய கட்டாயம் உள்ளது .
ஐரோப்பாவில் நாடகம் தொடங்கப்பட்ட காலம் முதல் அது நில பிரபுத்துவ கைப்பிடியில் இருந்தது .உழைக்கும் மக்கள் நாடகத்திற்கு செல்லும் அளவிற்கு பொருளாதாரம் இடம் கொடுக்கவில்லை .ஆகையால் நாடகம் வெகுஜன ஊடமாக வளரவில்லை .பணக்காரர்கள் பொழுதுபோக்க தங்கள் அந்தஸ்த்தை வெளிப்படுத்த நாடகம் அவர்களுக்கு உதவியது .
வெகுஜன மக்களும் நாடகம் பார்க்க தொடங்கிய காலத்தில் அவர்களால் ஒன்ற முடியவில்லை .காரணம் பல நேரத்தில் அரங்கம் முக்கிய பிரமுகர்களுக்காக காத்துக் இருந்தது .சில சமயம் அவர்களுக்காக மீண்டும் முதலில் இருந்து தொடங்கப்பட்டது சினிமா வந்த பிறகு தான், யாராக இருந்தாலும் குறித்த நேரத்தில் காட்சி தொடங்கி விடும் என்ற பரபரப்பில் திரையரங்க கதவுகளை நோக்கி ஓடி வந்தனர் .உயர்வு-தாழ்வு முரண்கள் சமன்செய்யப்பட்ட இடம் சினிமா தான்.
இது ஒரு புறம் இருக்க அடுத்து நாம் முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டியது ,இரண்டுக்கும் இடையில் உள்ள நடிப்பின் அளவீடுகள் .நாடகம் மிகை நடிப்பை வெளிப்படுத்தும் .ஓங்கி அழுவது .உரக்க சிரிப்பது ,நீண்ட வசனங்களை ஒப்பிப்பது இப்படி மக்கள் வாழ்வியல் முறையில் இருந்து சற்று ஒதுங்கி தான் இருந்தது .அதற்க்கு மேல் நாடக அரங்கில் வேறு ஒன்றும் செய்யவும் முடியாது .குறைந்த இடத்தில் மொத்தத்தையும் வெளிபடுத்த வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு .
சினிமாவும் ஆரம்பத்தில் இப்படி தான் இருந்தது .காரணம் நாடகத்தின் தாக்கம் .ஆனால் சில காலத்திலேயே சுதாரித்து கொண்டது .காட்சிக்கு தேவையான நடிப்பும் ,உடல் மொழியும் இருந்தால் போதும் .அளவிற்கு அதிகமாகவும் அல்லது குறைந்தும் நடிக்க முடியாது .காரணம் close-up காட்சிகள் உணர்வுகளை வெளிப்படுத்தும் கருவியாக இருந்தது .கொஞ்சமும் யதார்த்தத்தில் இருந்து விலகாமல் சரியான அளவில் நடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டது .
கோபத்தை ,அழுகையை ,சந்தோஷத்தை ,துக்கத்தை ,ஆச்சரியத்தை ,அதிசயத்தை அப்பட்டமாக படம் பிடித்து காட்டியதால் வெகு ஜன மக்களிடம் ஒன்றி போய் விட்டது .அடுத்து வந்த சமுக படங்கள் மொத்தமாக மக்களை அடிமைப்படுத்தி விட்டது .மக்கள் தங்கள் வாழ்வை திரையில் பார்த்து சிலிர்த்து கொண்டனர் .
நாடக கலைஞர்கள் உயிரைக் கொடுத்து உரக்க பேசிய காட்சிகளை விட ,வசனமே பேசாமல் மெல்லிய உணர்வை வெளிப்படுத்திய சினிமாவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்ப்பு இருந்தது .நாம் அடிக்கடி சொல்வது போல் சினிமா ஒரு வாழ்வியல் பயணம் உங்கள் கரம் பிடித்து அவர்களின் உலகிற்கு அழைத்து செல்லும் .
நாடக நடிப்பை நாம் குறைத்து மதிப்பிடவில்லை .அன்றைய காலக் கட்டத்திற்கு அது தேவையாய் இருந்தது .ஆனால் திரை நடிப்போடு ஒப்பிட்டால் நாடகத்தின் கை இறங்கியே உள்ளது என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும் .
Comments
Post a Comment