கதையை எளிதாக்குங்கள் - கதாபாத்திரத்தை வலுவாக்குங்கள் .



ஹிட்ச்காக் ஒருவிழாவில் இப்படி சொன்னார் "ஒருவேளை நான் திரைப்பட கல்லூரி நடத்தினால் எந்த மாணவனையும் கேமரா அருகே இரண்டு ஆண்டுகள் அனுமதிக்கவே மாட்டேன் என்று ".

ஏனென்றால் ஒவ்வொரு திரைப்படமும் ஒரு வாழ்வியல் பயணம் .அங்கு உலாவும் மனிதர்கள் உங்களுக்குள் ஊடுருவி உங்கள் உணர்வுகளை அசைக்க போகிறவர்கள் .அவர்களை பற்றி முழுமையாக அறியாமல் நாம் என்ன திரைப்படம் எடுக்க முடியும் ?

அதோடு மட்டும் அல்லாமல் ஒவ்வொரு திரைப்படமும் காலத்தின் ,கலாச்சாரத்தின் வெளிப்பாடு .நாம் எடுக்கும் திரைப்படம் அத்தனையும் சம காலத்தின் பதிவுகள் .ஐம்பது ஆண்டு கழித்து வரும் தலைமுறையினர் பார்க்கும் பொழுது நாம் வாழ்வியலை அவர்கள் தெரிந்து கொள்வார்கள் .

நன்றாக கவனித்து பாருங்கள் ஆரம்பகால சினிமாவில் மிகைபடுத்தப்பட்ட நடிப்பு இருக்கும் .காரணம் ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் நாடக கொட்டகையில் கடைசி நபர்வரை உணர்வு போய் சேர வேண்டும் .அதனால் ஓங்கி பேச வேண்டிய நிர்பந்தம் வந்தது .

அதன் பின் நாடக நடிகர்களே திரைக்கு வந்ததால் அதுவே தொடர்ச்சியாக நீடித்தது .பின் வந்த இயக்குனர்கள் தான், திரைமொழி வேறு நாடக மொழி வேறு என்பதை புரிந்துக் கொண்டனர் .அதன் பிறகே சினிமாவின் வீச்சு பெரிய அளவில் மக்களை உலுக்க தொடங்கியது .

துல்லிய உணர்வுகளை பிரதிபலிக்கும் திறனும் ஆற்றலும் சினிமா மொழியால் மட்டுமே சாத்தியமானது .அத்தனை துல்லியம் உங்களுக்கு வரவேண்டும் என்றால் மக்களை படியுங்கள் .அவர்களின் வாழ்வியல் ,சமுக அணுகுமுறை ஆகியவற்றை உற்று கவனியுங்கள் .

உங்கள் கண் வழியாக பார்க்கும் உலகம் குறுகிய அளவீடு கொண்டது .மக்களின் கண் வழியாக உலகத்தை பாருங்கள் அதற்க்கு அளவீடுகளே இல்லை .அத்தனை பெரிய உலகம் அது .அடுக்கடுக்கான அழுத்தங்களும் ,குமறல்களும் நிறைந்த உலகம்  அது .

சிறந்த இயக்குனர் என்பதற்க்கான அடையாளம் கதை மாந்தர்களின் உணர்வுகள் சரியான அளவில் வெளிக்கொணர  அவர் அயராது உழைத்து இருப்பார் .இன்று நாம் மதிப்பீடு செய்யும் நல்ல இயக்குனர்களின் அடையாளம் அவர்களின் கதை மாந்தர்கள் தான் .

ஆக ஒரு சிறந்த கதை என்பது நடிகர் ,மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களால் மட்டும் படைக்க முடியாது .காலத்தின்,கலாச்சாரத்தின் ,பண்பாட்டின் நகலாய் இருக்க வேண்டும் .உங்கள் கதாப்பாத்திரம் வலிமையானால் கதை அமைப்பது  மிகவும் எளிதாகி விடும் .

Comments

Popular posts from this blog

திரைக்கதை அமைப்பது எப்படி ?

திரைக்கதையின் மாதிரி வடிவம் கிடைக்குமா ?

எது உலக சினிமா ?