சுவாரசிய சினிமா - MINE
அமெரிக்காவை இதுவரை தூக்கிப் பிடித்து கொண்டு இருப்பது உலகெங்கும் வெளியாகும் அமெரிக்காவின் திரைப்படங்கள் தான் .காட்சி ஊடகத்தின் வலிமை அது .உலகம் அழிய போகிறதா அமெரிக்கா தான் காப்பற்றும் .அடுத்த நாட்டில் பிரச்சனையா பஞ்சாயத்து பண்ண இராணுவத்தோடு கிளம்பி விடும் .
ஒரு நாடு தனக்கு வேண்டுமென்றால் கொஞ்சமும் கூச்சப்படாமல், அந்த நாட்டில் அணு ஆயுதம் இருக்கிறது என்று அடுத்த நாளே போர் தொடுக்க கிளம்பி விடும் .அரசியலாக பார்த்தால் இது அநாகரீகம் .ஆனால் அவர்கள் எடுக்கும் திரைப்படங்களை பார்த்தால் இந்த உலகை காக்க வந்த தெய்வ தூதுவர்கள் போன்று காட்சிப் படுத்தி இருப்பார்கள் .
உண்மையில் திரைப்படங்களின் பலமே நம்மை ஏமாற்றி நம்ப வைப்பது தான் .அப்படி ஒரு வேலை நாம் நம்பி விட்டால் அந்த படம் நிச்சயம் வெற்றிபடமாக இருக்கும் .
நாம் முன்னர் சொன்னது போல கதாப்பாத்திரத்தை வலிமையாக்குங்கள் கதை மிக எளிமையாகிவிடும் .நாம் உணர்வும் உணர்ச்சியும் நிறைந்தவர்கள் ,நம்மை அறியாமல் நாம் தினமும் பல வித உணர்சிகளை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறோம் .திரையில் ACT செய்வதற்கு நாம் REACT செய்ய வேண்டும் .அப்பொழுது தான் அந்த சம்பவம் முற்று பெறும் .
MINE திரைப்படத்தை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் நிச்சயம் REACT செய்வீர்கள் .கடும் வெயில் நிறைந்த பாலைவனத்தில் உங்கள் உடன் வந்தவர் கண்ணிவெடியில் கால் வைத்து உடல் சிதறி இறந்து விடுகிறார் .அவரை காப்பாற்ற அடுத்த அடியை எடுத்து வைக்கும் உங்கள் காலுக்கு கீழும் கண்ணி வெடி உள்ளது .கால் எடுத்தால் நீங்களும் சிதறி விடுவீர்கள் .
உதவிக்கு யாரும் அருகில் இல்லை .என்ன செய்வீர்கள் ?இது தான் கதை .வெறும் ஒற்றை கதாப்பாத்திரத்தை வைத்து இரண்டு மணி நேரம் உங்களை அமர வைக்க முடியுமா ?முடியும் .
கதாப்பாத்திரத்தை வலிமையாக்குங்கள் என்று சொல்வதற்கு இது தான் காரணம் .ஒவ்வொரு தனி மனிதனும் தனித்தன்மை உடையவன் .அவனுக்கான அடையாளம் ஒன்றை போல் இருக்காது .ஒருவனின் குடும்ப பின்னணி ,வளர்ந்த புறசூழல் ,அவனுக்கான தனித்திறமை இதை வைத்தே அவனின் வாழ்வியல் முறை அமையும் .
ஒரு கதாப்பாத்திரத்தை நாம் உருவாக்கும் முன்பு இதை எல்லாம் நாம் சிந்திக்க வேண்டும் .குறிப்பாக தனித்தன்மை என்ன என்பதை தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டும் .அப்பொழுது தான் சரியான அளவுகளில் உணர்ச்சியை நாம் நடிகரிடம் இருந்து பெற முடியும் .
சரியான அளவீடுகளில் உணர்ச்சி திரையில் தோன்றினால் உங்களை அறியாமல் நீங்கள் REACT செய்ய தொடங்கி விடுவீர்கள்.அந்த சுழலில் உங்களை பொருத்திப்பார்த்து கொள்வீர்கள் .அது தான் மனித இயல்பு .
நிஜத்தில் ஒரு பிரச்னை முடிந்த பின்பு தான் ,அதற்க்கு பல தீர்வுகளை இப்படி செய்து இருக்கலாமா ?அப்படி செய்து இருக்கலாமா என்று சிந்திப்போம் .இதையே தான் திரையிலும் நாம் செய்கிறோம் .நாயகனின் பிரச்சனைக்கு நம் மூளை தீர்வு தேடும் .ஆனால் அங்கே நடப்பது நிஜம் என நம் மூளை நம்ப வேண்டும் .
MINE திரைப்படத்தை பார்க்கும் பொழுது உங்கள் காலின் கீழ் கண்ணிவெடி இருப்பதை உணர்வீர்கள் .
Comments
Post a Comment