திரையரங்கம் கொண்டாட்டத்தின் குறியீடு .
ஒரு ஆய்வின் முடிவு இப்படி சொல்கிறது . வெறும் ஒலியாக கேட்கும் விஷயங்கள் மூன்று நாட்களுக்கு பிறகு உங்களால் 10% தான் நினைவு கூற முடியும் .அதுவே கண்களால் பார்த்த விஷயத்தை 35% நினைவு கூற முடியும் .ஆனால் ஒலி ஒளியுடன் சேர்த்து பார்க்கும் விஷயத்தை உங்களால் மூன்று நாட்களுக்கு பிறகும் 65% நினைவு கூற முடியும் .
சினிமாவின் வலிமை அது தான் . உள்ளம் ஊடுருவி உங்களை திரையோடு பயணிக்க செய்யும் மாயம் .திரைப்படங்களுக்கே உண்டு .உடல் பொருள் ஆவி அனைத்தையும் ஒப்புக்கொடுத்து நாம் அனுபவிக்கும் பேரானந்தம் சினிமா .
இப்படி நாம் ஒப்புக்கொடுக்க அங்கே என்ன இருக்கிறது ?
புதிய உலகம் . நீங்கள் காணாத அல்லது காண தவறிய மனிதர்கள்.ரத்தமும் சதையுமாக உணர்வு பொங்க அவர்களின் கதையில் நீங்கள் பயணம் செய்வீர்கள் .

காதல் ,பாசம் ,சகோதர அன்பு ,தேசப்பற்று ,தோல்வி ,வெற்றி என திரையில் நாம் திளைப்போம் .அந்த உணர்வு தரும் சிலிர்ப்புகே நாம் திரையரங்கம் செல்கிறோம் .சரியாக பரிமாறப்பட்டால் உண்ட திருப்தியுடன் நாம் வெளியேறுகிறோம் .இல்லையென்றால் படத்தை குறித்து அவநம்பிக்கையுடன் வெளியேறுகிறோம் .
இந்த அவநம்பிக்கை ஏற்ப்படுவதற்கான காரணம் ,திரையில் தோன்றும் சம்வங்கள் நம் மனதோடு ஒன்றாதது தான் .திரைக்கும் நமக்கும் நெருக்கம் உண்டாக வேண்டும் .அங்கே நடப்பது நிஜம் என்ற அளவுக்கு காட்சிகள் நமக்கு உணர்வூட்ட வேண்டும் .
அந்த உணர்வு நமக்கு எப்பொழுதும் வரும் என்றால் ,திரையில் வரும் காட்சிகளை நம் நிஜ வாழ்வியலோடு ஒப்பிட்டு இரண்டும் ஒன்றோடு ஒன்று பொருந்தினால் நாமும் சிலிர்ப்போம் .தவறும் பட்சத்தில் ஒன்றாமல் வெளி வருகிறோம் .
உண்மையில் திரையரங்கம் வந்த பிறகு தான் மக்கள் மகிழ்வின் மொழியை முற்றாக பெற்றனர் .நாள் எல்லாம் உழைத்து களைத்து உள்ளம் சோர்ந்து போனவர்களுக்கு ஆறுதல் தந்தது சினிமா தான் .உணர்வு பெருக்கில் ஒரே சேர குதூகலித்தது திரையரங்கில் தான் .
ஒரு வேளை இந்த உலகில் அனைத்தும் அழிந்து போனாலும் ஒரே ஒரு திரையரங்கமும் ,அதி சிறந்த படங்களும் மிஞ்சினால் போதும் மனிதன் இழந்ததை தானாக மீட்டுக் கொள்வான் .

Comments
Post a Comment