சுவாரசிய சினிமா - The Shawshank Redemption



இந்த சமூக கட்டமைப்பு மனிதர்களை ஏதாவது ஒரு விதத்தில்  அச்சமூட்டி நமக்குள் இருக்கும் காட்டுமிராண்டிதனத்தை அடக்கி வைக்க தொடர்ந்து முயற்சி செய்கிறது .உண்மையில் எப்பொழுது சட்டம் மனிதனை கட்டுப்படுத்தியதோ ,அப்பொழுதில் இருந்து மனித நாகரீகம் வளர தொடங்கியது .

வரலாறு எழுத தொடங்கிய காலம் முதல் நம் காதுகளில் தவறாது ஒலிக்கும் வார்த்தை சிறை .சொல்லப்போனால் சிறை தான் பல வரலாறுகளை உருவாக்கியது .சுதந்திரம் என்பது என்ன என்பதை சிறைக்கு ஒரு முறை சென்று வந்தால் தெரியும் .

இந்த உலகில் இருந்து நீங்கள் அந்நியப்பட்டு ,கட்டுப்பாடுக்குள் வாழும் ஒரு உலகம் .நாம் அநேகமாக ஒரே செயலை திருப்பி திருப்பி செய்வதில்லை.காரணம் உளவியல்ரீதியாக நமக்கு ஒரு சோர்வு தட்டிவிடும் .
ஆனால் ஆயுள் முழுதும் ஒரே நடைமுறையை பின்பற்ற வேண்டுமென்றால் அதற்க்கு அசாத்திய மனதிடம் வேண்டும் .

மனைவியையும் அவளின் காதலனையும் கொலை செய்துவிட்டு ஆயுள் தண்டனை அனுபவிக்கும் நாயகன் பற்றிய கதை .ஆயுள் தண்டனை கைதி  ஒருவன் சிறையிலிருந்து விடுதலை குறித்து யோசிப்பது எல்லாம் கனவிலும் நிறைவேறாத காரியம் .அதுவும் தப்பிப்பது குறித்து யோசிக்க கூட முடியாது .அமெரிக்காவின் சிறை கட்டமைப்பு அப்படி .தப்பிய அரை மணி நேரத்தில் யாராக இருந்தாலும் மீண்டும் சிறைக்கு வந்து விடுவார்கள் .

ஆனால் சரியான திட்டமிடல் ,காலம் கணித்தல் ,பொறுமை இவை அனைத்தும் இருந்தால் ,எங்கே இருந்தாலும் நாம் நினைப்பதை சாதித்து விடலாம் .பொறுமை என்றல் கொஞ்சம் நஞ்சம் அல்ல 19 ஆண்டுகள் 9 மாதம் கழித்து நடக்க போகும் செயலுக்கு இன்று முதல் அதற்க்கான பணியை தொடங்கும் அளவுக்கு பொறுமை .

2 மணி நேரம் 22 நிமிடங்கள் உங்களை கட்டிப்போட்டு பார்க்க வைக்கும்  .அத்தனை அற்புதமாக இருக்கும் படைப்பாக்கம் .நாம் அடிக்கடி சொல்வது போல் சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல .அது வாழ்வியல் பயணம் .
நீங்கள் பயணிக்காத உலகத்தை உங்கள் அருகே அழைத்து வரும் .

உங்கள் உணர்வுகளை தட்டி எழுப்பிஉங்களை நிலைகுலைய செய்யும்.நிச்சயம் ஒரு நல்ல அனுபவமாக இந்த திரைப்படம் இருக்கும் .

Comments

Popular posts from this blog

திரைக்கதை அமைப்பது எப்படி ?

திரைக்கதையின் மாதிரி வடிவம் கிடைக்குமா ?

எது உலக சினிமா ?