சுவாரசிய சினிமா - SHUTTER ( Malayalam)



உலகம் தோன்றி இத்தனை ஆயிர கோடி வருடங்களில் மனித இனம்  மட்டும் தான்  புறசூழலுக்கு ஏற்ப தன்னை தகவமைத்து தப்பி பிழைத்து  இந்த உலகை ஆள்கிறது .தப்பி பிழைப்பது என்பது, பிரச்சனைகளில் இருந்து தப்பிப்பது அல்லது விடுப்படுவது .இதை இரண்டையும் மனிதன் சிறப்பாக செய்வான் .

உண்மையில் சந்தோசம் என்பது கஷ்டத்தில் இருந்து விடுப்படுவது தான்.தினம் ஒரு பிரச்னையை கடந்து தான் நாம் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறோம் .அவரவர் தகுதிக்கு ஏற்ப பிரச்சனை இருந்துக் கொண்டே தான் இருக்கிறது .ஒன்று அதை எதிர்க்கொள்ள வேண்டும் அல்லது ஒளிந்துக் கொள்ள வேண்டும் .

திரைக்கதை அமைப்புக்கான அடிப்படை சித்தாந்தமே இது தான் .கதையில் பிரச்சனை இருக்க வேண்டும் .அதை நாயகன் எதிர்க்கொள்ள வேண்டும் ,அதற்க்கு தீர்வு கிடைக்க வேண்டும் .அந்த தீர்வு மகிழ்வானதாகவும் இருக்கலாம் ,துயர் உடையதாகவும் இருக்கலாம் .ஆனால் கட்டாயம் தீர்வு இருந்தே தீரும் .

மலையாள சினிமாக்களின் தரம் குறித்து விமர்சனம் செய்யாதவர்களே கிடையாது .அவர்களின் கதை மண்ணின் மாந்தர்களை குறித்தே இருக்கும் .
வாழ்வியல் உணர்வுகளை சரியான அளவீடுகளில் பிரதிபலிப்பார்கள் .அதே சமயம் திரைக்கதை அமைப்புக்கு அவர்கள் செலுத்தும் அக்கறை இந்திய அளவில் வேறு எந்த மொழியிலும் இல்லை என சொல்லலாம் .

மிக சிறிய கதைக்கரு போதும் .அதை சரியான அளவில் சிறந்த படைப்பாக்கி விடுவார்கள் .SHUTTER கதைக்களம் மிக சாதாரணமான ஒன்று .வீட்டின் வாசலிலே இருக்கும் கடையில் வார இறுதியில் நண்பர்களுடன் மது அருந்தும் பழக்கம் உள்ள நாயகன் .ஒரு நாள் சபலப்பட்டு விலைமாதுவை அங்க அழைத்து வருகிறான் .கதையின் ஷட்டரை வெளிப்பக்கமாக பூட்டிக்கொண்டு விடிவதற்குள்  திறந்து விடுவதாக செல்லும் நாயகனின் நண்பன் சில பிரச்சனைகளில் சிக்கி வர இயலாமல் போய் விடும் .

விடிந்தால் வீட்டில் மனைவி தேடுவாள் ,பக்கத்தில் உள்ள கடைகளில் ஆட்கள் வந்து விடுவார்கள் .இதிலிருந்து தப்பித்தாரா ?அல்லது சிக்கிக் கொண்டாரா ?என்பதே கதை .முன்னர் சொன்னது போல பிரச்சனை வந்தால் தானாக நாம் தீர்வை தேடி செல்வோம் .நாயகன் என்ன மாதிரியான தீர்வை எதிர் நோக்குகிறான் என்பதே SHUTTER  .



Comments

Popular posts from this blog

திரைக்கதை அமைப்பது எப்படி ?

திரைக்கதையின் மாதிரி வடிவம் கிடைக்குமா ?

எது உலக சினிமா ?