சுவாரசிய சினிமா - 21 GRAMMES



நாம் சிலரை பார்த்தாலே பரவசம் அடைவோம் .அவர்கள் பேசுவது அத்தனை சுவாரசியாமாக இருக்கும் .மிக சாதாரண விஷயத்தை கூட அவர் சொல்லும் பொழுது மிக பிரமாதமாக இருக்கும் .பேச்சின் ஏற்ற இறக்கம் ,கூட நாலு வார்த்தை போட்டு பேசுவது ,என அவரின் பேச்சை கொண்டாடுவோம் .சரியாக சரியான நேரத்தில் ,சரியான விஷயத்தை பேசுவது பெரிய கலை .அது அனைவருக்கும் கைக் கூடாது .மிக சிலருக்கே அத்தைகைய கலை கைக்கூடும் .

திரைக்கதையும் ஏறக்குறைய பேச்சு கலைக்கு சரி நிகரானதே .ஒரு சாதாரண சம்பவத்தை கூட ஈர்க்க வைக்ககூடிய சக்தி திரைக்கதை அமைப்புக்கு உண்டு .என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்பதை விட யார் சொல்கிறார்கள் என்பதையே மக்கள் விரும்புவர் .அதை போலவே என்ன சொல்ல வந்தோம் என்பதை எல்லாம் மறந்து எப்படி சொல்லி இருக்கிறோம் என்பதையே மக்கள் கவனிக்கிறார்கள் .

திரைக்கதை  கேள்வி பதில் போன்றதே .ஒன்று  கேள்விக்கு நீங்கள் கட்டாயம் பதில் சொல்லியே ஆக வேண்டும்  .அல்லது பதிலுக்கான கேள்வியை சொல்ல வேண்டும் .எதிர்வினை நடந்து இருந்தால் நிச்சயம் வினை நடந்து இருக்கும் .அந்த வினையை நீங்கள் விளக்க வேண்டும் .அப்பொழுது தான் சம்பவம் முற்று பெரும் .

இது வரை நாம் சினிமா விமர்சனம் எழுதியது கிடையாது .ஏனென்றால் சினிமா ஒவ்வொருவரின் தனிப்பட்ட புரிதலின் அடிப்படையில் அதற்க்கான தரம் நிர்ணயிக்கப்படுகிறது .ஆதலால் நமக்கு பிடித்த சினிமா நிச்சயம் மற்றவருக்கு பிடிக்கும் என்பதை சொல்ல முடியாது .அதனால் நாம் பரிந்துரை மட்டுமே செய்ய முடியும் .நல்ல சினிமாவா இல்லையா என்பது பார்ப்பவரின் பொறுப்பு .

21 Grammes மிக சாதாரண கதைக்களம் தான் .இதயக் கோளாறால் உயிருக்கு போராடும் ஒருவன் மாற்று இதயத்துக்காக காத்துக் கொண்டு இருக்கிறான் .
அவனுக்கு மாற்று  இதயம்  கிடைக்கிறது .தனக்கு பொருத்தப்பட்டுள்ள இதயம் யாருடையது என்பதை அறிய விரும்புகிறான் .இது தான் கதை .


ஆனால் இது தான் கதை என்பது புரிய உங்களுக்கு ஒரு மணி நேரம் ஆகும் . உங்கள் ஆவலை அதிகப்படுத்திக்கொண்டே இருக்கும் அளவுக்கு  ஒரு மணி நேர திரைக்கதை அமைப்பு  இருக்கும் .காட்சிகளை கலைத்துப்   போட்டு விளையாடி இருப்பார்கள் .இது தான் திரைக்கதையின் பலம் .உங்களை காக்க வைக்க வேண்டும் .அதே சமயம் நீங்கள் சோர்ந்து போகாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும் .

இந்த சினிமா அத்தைகைய வகையை சார்ந்தது .என் அளவில் சிறந்த திரைக்கதை அமைப்பை கொண்ட படம் 21 GRAMMES .படத்தின் மதிப்பீடு உங்களை பொருத்தது .இனி  தினம் ஒரு படம் அறிமுகம் செய்யலாம் என்ற நோக்கத்தில் "சுவாரசிய சினிமா " எழுத தொடங்கி உள்ளோம் .நன்றி .


Comments

Popular posts from this blog

திரைக்கதை அமைப்பது எப்படி ?

திரைக்கதையின் மாதிரி வடிவம் கிடைக்குமா ?

எது உலக சினிமா ?