Posts

Showing posts from April, 2017

ஒரு கோடிக்குள் படம் பண்ண முடியுமா ?

ஏன் சினிமாவை நாம் இவ்வளவு நேசிக்கிறோம் ?பணம் வாங்கிக் கொண்டு நடிக்கும் கலைஞனிடம் நம்மையே ஏன் ஒப்புக் கொடுக்கிறோம் ?.இத்தனை பெரிய ஆர்ப்பரிப்பு ,ஆரவாரம் வேறு எதுக்குமே நாம் கொடுப்பது இல்லையே? அனைத்துக்கும் உச்சமாக சினிமாவை நாம் கருதுவது ஏன் ? ஏன் என்றால் சினிமா தான் மக்களிடம் சமத்துவத்தை விதைத்தது .சாதிய கட்டுமானங்களை உடைத்து அனைவரையும் ஒரே இருட்டு அறையில் அமர வைத்த பெருமை சினிமாவிற்கே சேரும் .அது மட்டும் அல்ல பார்த்தல் தீட்டு ,தொட்டால் தீட்டு என்ற கொடிய அடக்குமுறைகளை அடித்து நொறுக்கி படித்தவனும் பாமரனும் ,ஏழையும் பணக்காரனும் ,மேல் ஜாதி கீழ் ஜாதி என ஒட்டு மொத்த சமூகமும் இந்த கனவுலகத்தை காண ஓடி வந்தது . சமுகத்தின் வெளிப்பாடாய் சினிமாவும் ,சினிமாவின் பிரதிப்பலிப்பாய் சமூகமும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தே வளர்ந்து வருகிறது .அதனால் தான்  சினிமாவை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை .உணர்வு தூண்டுதலின் கருவியாக சினிமா மொழி மக்களால் பார்க்கப்படுகிறது . அவர்கள் எதிர்ப்பார்ப்பது ஒரு அனுபவம் .அது எப்படியாக இருந்தாலும் ஒரு சின்ன சலனத்தை அவர்கள் மனதில் ஏற்ப்படுத்திக் கொள்ள அவர்கள் வி

நாம் எங்கே தவறு செய்கிறோம் ?

Image
உலகில் சக்தி வாய்ந்தது அணுகுண்டு எனில் ,அதை விட ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்தது சினிமா .இரண்டாம் உலக போர் நடைப்பெற்ற சமயத்தில் அமெரிக்கா சாப்ளின் படத்துக்கு தடைப் போட்டது .பின்னர் அது ஹிட்லரை பகடி செய்த படம் என்பதால் உடனே தடையை நீக்கி ,திரையிட அனுமதித்தது மட்டுமல்லாமல், அரசாங்கமே பல இடங்களில் திரையிட வழி செய்தது . சமிபத்தில் The Dictator என்ற திரைப்படம் ஒரு மதத்தை கிண்டல் செய்வதை கண்டித்து  உலகெங்கும் அமெரிக்காவிற்கு கண்டனம் குவிந்தது.சென்னையில் அமெரிக்கா தூதரகம் நொறுக்கப்பட்டது, இன்றுவரை அண்ணா பாலத்தின் மீது காவல்துறை பாதுகாப்பிற்க்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர் . The Interview என்ற படத்தின் மூலம் வட கொரியா அதிபரின் சர்வதிகாரம் ,மற்றும் அந்த நாட்டின் உள்கட்டமைப்பை கேலியும் ,கிண்டலுமாக காட்சி படுத்தி இருந்தனர் .நேரடியாக வட கொரியா அரசு கடும் கண்டனத்தை பதிவு செய்தது மட்டுமல்லாமல் ,இன்று வரை அமெரிக்காவிற்கு சவாலாக அனைத்தையும் செய்து வருகிறது . ஒரு சாதாரண சினிமா இத்தனை பெரிய அரசியல் தாக்கத்தை ஏற்ப்படுத்துமா ?இரு தேசங்களின் நலனை பாதிக்குமா ?போர் மூளும் அளவிற்கு கொண்டு செல்லு

Movie Script For Sale @ Screenplay Sharpers

Image

கதாபாத்திரங்களை இணைப்பது எப்படி ? How to interrelate the characters ?

திரைக்கதை எழுத தொடங்கும் முன் ,நம்மிடையே வெறும் ஒரு காட்சியோ அல்லது கருவோ (idea,concept ) மட்டும் தான் இருக்கும் .அதை மட்டும் வைத்து கொண்டு நாம் முன்னே செல்வதா ? பின்னே செல்வதா ?எப்படி இதை ஒரு முழு தயாரிப்பாக (Finished Product) முடிக்க போகிறோம் என்ற தயக்கம் நம் அனைவருக்குள்ளும் ஏற்ப்படுவது இயல்பே . முதலில் அந்த கருத்தை எழுத்தில் கொண்டு வாருங்கள் .அது மிகவும் சாதாரண யோசனையாக கூட இருக்கலாம் .அதை பற்றி எல்லாம் சிந்திக்காமல் எழுத துணியுங்கள் .பின்னர் அந்த யோசனையை சுற்றி உங்கள் கற்பனை வளத்தை உபயோகியுங்கள். உதாரனமாக உங்கள் யோசனை ஒரு தனி நபர் பற்றியோ அல்லது ஒரு சம்பவத்தை பற்றியோ அல்லது நாவலை பற்றியோ அது எதுவாக இருந்தாலும் ,உங்கள் கதையில் வரும் கதாப்பத்திரங்களுக்கு உயிர் கொடுப்பது நீங்கள்  தான் . சரி கதாப்பத்திரங்களை ஏன் தொடர்ப்பு படுத்த வேண்டும் ?அழகிய காட்சிகள் படத்தில் இருந்தால் போதாதா ?தனி தனி சம்பவமாக இருந்து விட்டு போகட்டுமே ?ஏன் தொடர்பு படுத்த வேண்டும் ?இப்படி நாம் யோசித்தால் , தனியாக தான் , நாம்  எடுக்க போகும் திரைப்படத்தை பார்க்க நேரிடும் . பழிவாங்குவது குறித்து நாம் படம்

திரைக்கதையின் மாதிரி வடிவம் கிடைக்குமா ?

சில நண்பர்கள் திரைக்கதையின் மாதிரி வடிவம் கிடைக்குமா ?அதைப் பார்த்து நாங்கள் திரைக்கதை எழுதுவோம் அல்லது பயிற்சி பெறுவோம் என்கின்றனர் . திரைக்கதையின் மாதிரி வடிவம் இணையத்தில் ஆயிர கணக்கில் உள்ளது .ஆனால் அதைப் பார்த்து அல்லது படித்து உங்களால் திரைக்கதை எழுத முடியாது .ஒரு படத்தின்  திரைக்கதை புத்தகத்தை படித்து உங்களால்  திரைக்கதை அமைக்க முடியாது . மிக எளிதாக திரைக்கதையை புரிந்துக் கொள்ளுங்கள் .உங்கள் ஒரு நாள் வாழ்வை எடுத்துக் கொள்ளுங்கள் .காலை முதல் இரவு வரை என்ன செய்தீர்கள் என்று சிந்தித்து பாருங்கள் .வழக்கம் போல் அன்றைய நாள் இருந்தால் அது மிகவும் அலுப்பான ,எளிதில் யூகிக்க முடிந்த திரைக்கதையாய் இருக்கும் . அதுவே நீங்கள் எதிர்பாராத  ,உங்கள் தினசரி வாழ்வையே மாற்றிப் போடும் சம்பவங்கள் நிறைந்த நாளாக இருந்தால் ,அது நிச்சயம் சுவாரசியம் நிறைந்த திரைக்கதையாக மாறும் .அன்றைய நாளில் வந்த அத்தனை கதாபாத்திரங்களையும் நினைவில் கொள்ளுங்கள் . உங்கள் வாழ்வில் அவர்களின் பங்களிப்பு என்ன என்பதை சிந்தியுங்கள் .இப்பொழுது உங்களுக்கு ஒரு சம்பவம் கிடைத்து இருக்கும் . திரைக்கதை என்பது சம்பவங்களின் தொகு

கதை எல்லாம் முக்கியம் இல்ல சார் ,நல்ல சீனா சொல்லுங்க

இயக்குனர் ஒருவர் அழைத்து இருந்தார் .அறிமுகத்துக்கு பின் திரைக்கதை அமைப்பது குறித்து பேச்சு திரும்பியது .கதை குறித்து கேட்டோம்,கதை எல்லாம் முக்கியம் இல்ல சார் ,நல்ல சீனா சொல்லுங்க படத்துல வைப்போம் என்றார் . சரி சார், காட்சி எதப்பத்தி சொன்னிங்கனா ,அதுக்கு ஏற்றார் போல் சீன் யோசிக்கலாம் என்றோம் .நாலு லவ் சீன் புதுசா இருக்கனும் ,வில்லன் portion வெயிட்டஇருக்கணும் என்றார் . fight sequence எல்லாம் அனல் பறக்கணும் என்றவர் இறுதி வரைஅவரின் கதை என்னதான் என்று சொல்லவில்லை .இத்தனைக்கும் இரண்டு ஹிட் கொடுத்துஇருக்கிறார் .பெயர் வேண்டாம் . சரி கதை அமைப்பது குறித்து அவரின் தேவைக்கு ஏற்ப நாம் தொடங்குவோம் .நாலு லவ் சீன் படத்தில் வரவேண்டும் என்றால் ,நிச்சயம் நாயகன் ,நாயகியை தொடர்ப்பு படுத்த வேண்டும் .அதற்கு முன் காதல்வருவதற்க்கான தேவையை நாம் அறிந்து இருக்க வேண்டும் . Cliché காட்சிகள் மூலம் வரும் காதலை மக்கள் ஏற்க மாட்டார்கள் .ஆதலால் காதலுக்கான அடிப்படை தேவை ,இருவரும் சந்திப்பது .எதோ ஒரு விதத்தில் நாயகனும் நாயகியும்ஒரு வித செயலால் ஈர்க்கப் படவேண்டும் .ஆக அந்த செயல் மிக இயல்பாக நடைப்பெறவேண்டும் .ந

திரைக்கதை டிப்ஸ்

வரும் அழைப்புகள் அத்தனையும் சிறந்த கதை இருந்தால் சொல்லுங்கள் பண்ணலாம் என்றே ரீதியிலேயே வருகிறது .சிறந்த கதை எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டால் அவர்களால்  பதில் கூற முடியவில்லை .கதையையும் ,திரைக்கதையையும் போட்டு குழப்பி கொள்ளாதீர்கள் .கதை எப்படி வேண்டுமானாலும் பயணிக்கலாம் ,ஆனால் திரைக்கதை அவ்வாறு பயணிக்க முடியாது ,அது சில விதிமுறைகளுக்கு உட்பட்டது . தெளிவாக சொல்வதென்றால் பொன்னியின் செல்வன் நாவலை எடுத்துக்கொள்ளுங்கள் ,இதுவரை தமிழில் அதன் இடத்தை எவரும் எட்டவில்லை ,ஆனால் திரைக்கதையாக மொத்த நாவலையும்  எடுக்க முடியாது .காரணம் நினைத்த இடத்தில் கதாபாத்திரங்களை திரைக்கதையில் இடையில்  சொருக முடியாது .அப்படி செய்தால் திரைக்கதையில் ஒரு தொய்வு வரும் ,அடுத்தக் கட்ட நகர்விற்கு  இடையில் வரும் புது கதாபாத்திரங்களால் செல்ல முடியாது . வீட்டை விட்டு வெளியில் செல்லும் நீங்கள் எதோ ஒரு இலக்கை நோக்கியே உங்கள் பயணம் தொடங்கும் ,அது ஊருக்கு செல்வதாக இருக்கலாம் ,விளையாட செல்வதாக இருக்கலாம் ,அல்லது யாரையோ சந்திக்க செல்வதாக இருக்கலாம் ஆனால் இலக்கு என்பதை அடையும் பொழுது தான் அந்த பயணம் நிறைவு பெறு