திரைக்கதையின் மாதிரி வடிவம் கிடைக்குமா ?
சில நண்பர்கள் திரைக்கதையின் மாதிரி வடிவம் கிடைக்குமா ?அதைப் பார்த்து நாங்கள் திரைக்கதை எழுதுவோம் அல்லது பயிற்சி பெறுவோம் என்கின்றனர் .
திரைக்கதையின் மாதிரி வடிவம் இணையத்தில் ஆயிர கணக்கில் உள்ளது .ஆனால் அதைப் பார்த்து அல்லது படித்து உங்களால் திரைக்கதை எழுத முடியாது .ஒரு படத்தின் திரைக்கதை புத்தகத்தை படித்து உங்களால் திரைக்கதை அமைக்க முடியாது .
மிக எளிதாக திரைக்கதையை புரிந்துக் கொள்ளுங்கள் .உங்கள் ஒரு நாள் வாழ்வை எடுத்துக் கொள்ளுங்கள் .காலை முதல் இரவு வரை என்ன செய்தீர்கள் என்று சிந்தித்து பாருங்கள் .வழக்கம் போல் அன்றைய நாள் இருந்தால் அது மிகவும் அலுப்பான ,எளிதில் யூகிக்க முடிந்த திரைக்கதையாய் இருக்கும் .
அதுவே நீங்கள் எதிர்பாராத ,உங்கள் தினசரி வாழ்வையே மாற்றிப் போடும் சம்பவங்கள் நிறைந்த நாளாக இருந்தால் ,அது நிச்சயம் சுவாரசியம் நிறைந்த திரைக்கதையாக மாறும் .அன்றைய நாளில் வந்த அத்தனை கதாபாத்திரங்களையும் நினைவில் கொள்ளுங்கள் .
உங்கள் வாழ்வில் அவர்களின் பங்களிப்பு என்ன என்பதை சிந்தியுங்கள் .இப்பொழுது உங்களுக்கு ஒரு சம்பவம் கிடைத்து இருக்கும் .
திரைக்கதை என்பது சம்பவங்களின் தொகுப்பு மட்டும் அல்ல ,அது தொடர்ச்சியாக நடைப்பெறும் சுழற்சி முறை .ஒரு நிகழ்வு அடுத்து வரும் நிகழ்வை தீர்மானிக்கும் .இது தொடர் சங்கிலி போலே நிற்காமல் செயல்ப்படும் .ஆனால் இரண்டு மணி நேர படத்தில் நாம் இதை நிறுத்த வேண்டும் .
அப்பொழுது தான் முழு திருப்தியை பார்வையாளர்கள் பெறுவார்கள் .இதற்க்கு தான் நாம் கதையில் limited கதாப்பாத்திரத்தை கையாள வேண்டும் .ஒரே ஒரு சம்பவத்தின் நிகழ்வை மட்டும் நாம் எடுத்துக் கொண்டு திரைக்கதையை பின்ன வேண்டும் .
சம்பவம் மிக சாதரணமாக இருக்கலாம் ,அதை சிறந்த சம்பவமாக மாற்ற திரைக்கதை தான் உதவும் .நாம் தினசரிகளில் ஆயிரம் கொலை சம்பவம் படிக்கிறோம் .ஆனால் கொலைக்கான பின்னணி குறித்து நாம் என்றைக்காவது சிந்தித்து இருக்கிறோமா ?ஆயிரம் விபத்து செய்திகள் பார்க்கிறோம் ,விபத்தில் இறந்த நபர்களின் குடும்ப பின்னணி ,அவர்களின் இழப்பால் என்ன மாதிரியான இக்கட்டில் அந்த குடும்பம் இருக்கும் என்று யோசித்து பார்த்து இருக்கிறோமா ?
விபத்தில் இறந்தவர் யார் ?எங்கு சென்று கொண்டு இருந்தார் ?செல்வதற்க்கான காரணம் என்ன ?யாரை சந்திக்க போகிறார் ?எதில் போகிறார் ?விபத்து எங்கு நடந்தது ?நடந்தது விபத்து தானா ?இறந்தவர் பெயர் என்ன ?என்ன தொழில் செய்கிறார் ?வயது என்ன ?தனியாக சென்றாரா ?விபத்து எப்பொழுது நடந்தது ?இரவா ?பகலா ?
இரவு என்றால் ஏன் இரவில் செல்ல வேண்டும் ?மனைவி ,பிள்ளைகள் உள்ளனரா ?காதலி உள்ளாரா ?அவர்கள் எங்கே ?
இப்படி தொடர் கேள்விகளை சம்பவத்தை சுற்றி சுற்றியே கேட்டுப் பழகுங்கள் .உங்களுக்குள் பதில் பிறந்து இருக்கும் .பதில் தெரிந்து விட்டால் ஒரு கதைப் பிறந்து இருக்கும் .அதனால் ஒரு படத்தின் திரைக்கதை புத்தகம் உங்களுக்கு எந்த விதத்திலும் உதவாது .
ஏன் என்றால் அதை எழுதிய இயக்குனரும் நாம் மேல சொன்னது போல் கேள்வி எழுப்பி தான் திரைக்கதை அமைத்து இருப்பார் .
நீங்கள் பார்க்கும் திரைக்கதை புத்தகத்தின் ,இறுதி வடிவம் ,பதில் மட்டுமே இருக்கும் விடைத்தாள் .ஆக சிறந்த திரைக்கதைக்கு பதில் மட்டும் போதுமானது அல்ல ,அதி சிறந்த கேள்விகளும் அவசியம் .

Comments
Post a Comment