திரைக்கதை டிப்ஸ்

வரும் அழைப்புகள் அத்தனையும் சிறந்த கதை இருந்தால் சொல்லுங்கள் பண்ணலாம் என்றே ரீதியிலேயே வருகிறது .சிறந்த கதை எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டால் அவர்களால் 
பதில் கூற முடியவில்லை .கதையையும் ,திரைக்கதையையும் போட்டு குழப்பி கொள்ளாதீர்கள் .கதை எப்படி வேண்டுமானாலும் பயணிக்கலாம் ,ஆனால் திரைக்கதை அவ்வாறு பயணிக்க முடியாது ,அது சில விதிமுறைகளுக்கு உட்பட்டது .

தெளிவாக சொல்வதென்றால் பொன்னியின் செல்வன் நாவலை எடுத்துக்கொள்ளுங்கள் ,இதுவரை தமிழில் அதன் இடத்தை எவரும் எட்டவில்லை ,ஆனால் திரைக்கதையாக மொத்த நாவலையும் 
எடுக்க முடியாது .காரணம் நினைத்த இடத்தில் கதாபாத்திரங்களை திரைக்கதையில் இடையில்  சொருக முடியாது .அப்படி செய்தால் திரைக்கதையில் ஒரு தொய்வு வரும் ,அடுத்தக் கட்ட நகர்விற்கு 
இடையில் வரும் புது கதாபாத்திரங்களால் செல்ல முடியாது .

வீட்டை விட்டு வெளியில் செல்லும் நீங்கள் எதோ ஒரு இலக்கை நோக்கியே உங்கள் பயணம் தொடங்கும் ,அது ஊருக்கு செல்வதாக இருக்கலாம் ,விளையாட செல்வதாக இருக்கலாம் ,அல்லது யாரையோ சந்திக்க செல்வதாக இருக்கலாம் ஆனால் இலக்கு என்பதை அடையும் பொழுது தான் அந்த பயணம் நிறைவு பெறும் .அதை போல நீங்கள் அமைக்கும் திரைக்கதையும் இலக்கை நோக்கியதாக இருக்க வேண்டும் .ஆனால் இரண்டரை மணி நேரம் சுவாரசியம் குறையாமல் அந்த பயணத்தை விளக்க முடியுமா ?அப்படி முடிந்தால் நிச்சயம் சிறந்த திரைக்கதை அமைத்து உள்ளீர்கள் என்று பொருள் .

இப்படி வைத்துக் கொள்ளுங்கள் காலையில் அலுவலகம் செல்ல பேருந்து நிலையத்தில் காத்துக்கொண்டு இருக்கீறீர்கள்.அன்று முக்கியமான வேலை உள்ளது அலுவலகத்திற்க்கு  நீங்கள் கட்டயாம் சென்றாக வேண்டும் .பேருந்து வருகிறது ,ஏறி ,அலுவலகம் சென்று வேலையும் முடித்துக்கொடுத்து விடுகிறீர்கள் ,இதில் என்ன சுவாரசியம் இருக்கும் ?திரைக்கதை இங்கு தான் தன் வேலையை செய்யும் ,பேருந்தில் அமர்ந்த நீங்கள் உங்கள் பக்கத்தில் யாரோ ஒருவர் அமர்கிறார் ,சில நிமிடங்களில் உங்கள் நிறுத்தம் வந்தவுடன் நீங்கள் இறங்கும் பொழுது உங்களை கடத்துகிறார்கள்  .அதில் இருந்து கதையை தொடங்கி முடியுங்கள் ,முடிவு நீங்கள் எடுப்பது தான் .ஏன் கடத்தினார்கள்?உங்கள் பக்கத்தில் அமர்ந்த நபர் யார் ?அலுவலகத்தில் அப்படி என்ன அன்று முக்கியமான வேலை என்பதை திரைக்கதை தான் விளக்கும் .


Comments

Popular posts from this blog

திரைக்கதை அமைப்பது எப்படி ?

திரைக்கதையின் மாதிரி வடிவம் கிடைக்குமா ?

எது உலக சினிமா ?