நாம் எங்கே தவறு செய்கிறோம் ?


உலகில் சக்தி வாய்ந்தது அணுகுண்டு எனில் ,அதை விட ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்தது சினிமா .இரண்டாம் உலக போர் நடைப்பெற்ற சமயத்தில் அமெரிக்கா சாப்ளின் படத்துக்கு தடைப் போட்டது .பின்னர் அது ஹிட்லரை பகடி செய்த படம் என்பதால் உடனே தடையை நீக்கி ,திரையிட அனுமதித்தது மட்டுமல்லாமல், அரசாங்கமே பல இடங்களில் திரையிட வழி செய்தது .

சமிபத்தில் The Dictator என்ற திரைப்படம் ஒரு மதத்தை கிண்டல் செய்வதை கண்டித்து  உலகெங்கும் அமெரிக்காவிற்கு கண்டனம் குவிந்தது.சென்னையில் அமெரிக்கா தூதரகம் நொறுக்கப்பட்டது, இன்றுவரை அண்ணா பாலத்தின் மீது காவல்துறை பாதுகாப்பிற்க்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர் .

The Interview என்ற படத்தின் மூலம் வட கொரியா அதிபரின் சர்வதிகாரம் ,மற்றும் அந்த நாட்டின் உள்கட்டமைப்பை கேலியும் ,கிண்டலுமாக காட்சி படுத்தி இருந்தனர் .நேரடியாக வட கொரியா அரசு கடும் கண்டனத்தை பதிவு செய்தது மட்டுமல்லாமல் ,இன்று வரை அமெரிக்காவிற்கு சவாலாக அனைத்தையும் செய்து வருகிறது .

ஒரு சாதாரண சினிமா இத்தனை பெரிய அரசியல் தாக்கத்தை ஏற்ப்படுத்துமா ?இரு தேசங்களின் நலனை பாதிக்குமா ?போர் மூளும் அளவிற்கு கொண்டு செல்லுமா ?அப்படி என்ன இந்த சினிமா மக்களை பாதிக்க போகிறது ?அனைத்தும் நடிப்பு தானே ?திட்டமிட்டு எழுதி அதை ஒலி ஒளி சேர்த்து திரையிட போகிறோம் .மக்களும் அதை பார்த்து விட்டு செல்ல போகிறார்கள் ,இதில் என்ன அபாயம் வந்து விட போகிறது ?

நாம் நினைப்பது போல் சினிமா வெறும் ஒலி ஒளி காட்சிகள் மட்டும் அல்ல .அது அறிவு பகிர்தல் சாதனம் .இந்த உலகின் வரப்ரசாதம் .அழியா சக்தி கொண்டது .நேரடியாக ஒரு மனிதனை உலுக்கும் ஆற்றல் படைத்தது .பரவசத்தின் உச்ச நிலைக்கு உங்களை கொண்டு செல்லும் திறன் வாய்ந்தது .அதனால் தான் எல்லா நாட்டு அரசாங்கமும் தணிக்கை குழு வைத்து உங்கள் படைப்புகளை வேவு பார்க்கிறது .

உங்கள் படைப்பு எந்த விதத்திலும் அரசாங்கத்தை பாதிக்க கூடாது.இப்படி ஆற்றல் வாய்ந்த சினிமாவை நாம் எதோ ஒரு இடத்தில தவற விடுகிறோம் .முன்னர் சொன்னது போல் சினிமா ஒரு அறிவு பகிர்தல் .மக்களுக்கு நீங்கள் சொல்ல போகும் அனைத்தும் புரிய வேண்டும் .

கருத்து கூறும் படமாக வர வேண்டிய அவசியம் இல்லை .நீங்கள் எந்த மாதிரியான படம் எடுத்தாலும் மக்கள் அதனுள் பயணிக்க வேண்டும் .எப்படி ஒரு புத்தகத்தின் முன்னுரை அந்த புத்தகத்தின் உள்ளடக்கத்தை கூறி விடுமோ அதை போல் நாம் எடுக்க போகும் படத்தின் கதை ஆரம்பத்திலேயே மக்களுக்கு  புரிய வைக்க வேண்டும்.

ஏன் புரிய வைக்க வேண்டும் ?அவர்களாக புரிந்துக் கொள்ள மாட்டார்களா ?நிச்சயம் மாட்டார்கள் .அவர்கள் அதற்காக பணம் கொடுத்து திரையரங்கு வரவில்லை .அவர்கள் வருவது ஒரு அனுபவத்தை பெற .புதுமையான அனுபவம் .இது வரை பார்த்திராத அனுபவம் .சலிக்காமல் பார்க்க தூண்டும் அனுபவம் .அதை கொடுக்க வேண்டிய கடமை நம்முடையது .

அதை எப்படி கொடுப்பது என்றால் ?அவர்களுக்கு தெரிந்த விஷயத்தை அவர்களுக்கே தெரியாத கோணத்தில் தெரிவிப்பது .அந்த கோணம் என்னவென்றால் மக்கள்  மேலோட்டமாக அறிந்து உள்ள விஷயத்தை நீங்கள் ஆழமாக அறிவிக்க வேண்டும் .

உதரணாமாக அங்காடி தெரு திரைப்படத்தை எடுத்துக் கொள்ளுங்கள் நமக்கு நன்கு அறிந்த பணியாளர்கள் பற்றிய கதை தான் ,ஆனால் அவர்களின் அந்தரங்க வாழ்வை நாம் நேரடியாக சென்று அறிய முடியாது ,அதற்க்கு உதவும் கருவி தான் சினிமா .அறிவு பகிர்வின் எளிமை மொழி சினிமா .

ஆக நாம் தவற விடும் இடம் இது தான் .புதிய சிந்தனை,புதிய காட்சி அமைப்புகள் அதோடு கொஞ்சம் நிஜமும் கலந்த சினிமா என்றும் தோற்ப்பதில்லை .


Comments

Popular posts from this blog

திரைக்கதை அமைப்பது எப்படி ?

திரைக்கதையின் மாதிரி வடிவம் கிடைக்குமா ?

எது உலக சினிமா ?