கதை எல்லாம் முக்கியம் இல்ல சார் ,நல்ல சீனா சொல்லுங்க
இயக்குனர் ஒருவர் அழைத்து இருந்தார் .அறிமுகத்துக்கு பின் திரைக்கதைஅமைப்பது குறித்து பேச்சு திரும்பியது .கதை குறித்து கேட்டோம்,கதை எல்லாம்முக்கியம் இல்ல சார் ,நல்ல சீனா சொல்லுங்க படத்துல வைப்போம் என்றார் .
சரி சார், காட்சி எதப்பத்தி சொன்னிங்கனா ,அதுக்கு ஏற்றார் போல் சீன்யோசிக்கலாம் என்றோம் .நாலு லவ் சீன் புதுசா இருக்கனும் ,வில்லன் portion வெயிட்டஇருக்கணும் என்றார் .fight sequence எல்லாம் அனல் பறக்கணும் என்றவர் இறுதி வரைஅவரின் கதை என்னதான் என்று சொல்லவில்லை .இத்தனைக்கும் இரண்டு ஹிட் கொடுத்துஇருக்கிறார் .பெயர் வேண்டாம் .
சரி கதை அமைப்பது குறித்து அவரின் தேவைக்கு ஏற்ப நாம் தொடங்குவோம்.நாலு லவ் சீன் படத்தில் வரவேண்டும் என்றால் ,நிச்சயம் நாயகன் ,நாயகியை தொடர்ப்பு படுத்த வேண்டும் .அதற்கு முன் காதல்வருவதற்க்கான தேவையை நாம் அறிந்து இருக்க வேண்டும் .
Cliché காட்சிகள் மூலம் வரும் காதலை மக்கள் ஏற்க மாட்டார்கள் .ஆதலால்காதலுக்கான அடிப்படை தேவை ,இருவரும் சந்திப்பது .எதோ ஒரு விதத்தில் நாயகனும் நாயகியும்ஒரு வித செயலால் ஈர்க்கப் படவேண்டும் .ஆக அந்த செயல் மிக இயல்பாக நடைப்பெறவேண்டும் .நாம் வாழ்வில் இருந்து அந்த காட்சிகளை எடுத்து கையாளலாம்.
அடுத்து வில்லன் என்பவர் யார் ?எதிர்மறை செயல் செய்பவர் .நாம்வாழ்வில் தினமும் எத்தனை எதிர் மறை நபர்களை நாம் சந்திப்போம்?நம்மோடே பயணம்செய்யும் ,நமக்கு எதிராய் செயல் புரியும் நபர்களை கதையில் வில்லன் என்போம் .
உதாரனமாக அலுவலக வேலையாக உங்களிடம் ஒரு பெரும் பணத்தை தருகிறார்கள்.அதை நீங்கள் ஒரு இடத்தில சேர்க்க வேண்டும் .ஆனால் வழியில் பணத்தை தவறவிடுகிறீர்கள் .பணத்தை எடுத்தவனை காவல்துறை பிடித்து விடுகிறது .ஆனால் காவல்ஆய்வாளர் பணத்தின் மீது ஆசைக்கொண்டு அதை மறைத்து விடுகிறார் .நீங்கள் அளிக்கும்புகாரை ஏற்க வில்லை .ஆக இப்பொழுது வில்லன் யார் ?பணத்தை எடுத்தவனா ?அல்லது அதைமறைப்பவனா ?அவனிடம் இருந்து உங்கள் கதை நாயகன் பணத்தை மீட்டானா இல்லையா?என்பதை கதையின்தேவைக்கு ஏற்ப அடுத்தடுத்த காட்சிகளின் மூலம் நாம் சிறந்த திரைக்கதை அமைக்கலாம் .
ஒரு சம்பவத்தின் முடிவு அடுத்த சம்பவத்தின் தொடக்கம்.உங்கள் கல்லூரிகாலத்தின் முடிவு என்பது நீங்கள் அடுத்து வாழ போகும் வாழ்வின் தொடக்கம்.திரைக்கதையும் அப்படிதான் ஒருக் காட்சியின் முடிவு அடுத்த காட்சியின் தொடக்கமாகஇருக்க வேண்டும் .
ஆனால் சிறந்த காட்சிகள் மூலம் மட்டுமே நீங்கள் படம் எடுக்க முடியாது.என்ன தான் விலையுயர்ந்த ஆடையாக இருந்தாலும் உங்கள் உடல் அமைப்புக்கு அது பொருந்தவேண்டும் .விலை உயர்ந்தது என்பதற்காக நீங்கள் உங்களுக்கு பொருந்தாத ஆடையை அணியமுடியாது .
அதை போலவே கதைக்கு தேவைப்படும் காட்சிகளை மட்டும் தான் நாம் கையாளமுடியும் .சிறந்த காட்சி என்பதற்காக அனைத்தையும் நாம் பயன்படுத்த முடியாது .
Comments
Post a Comment