கதாபாத்திரங்களை இணைப்பது எப்படி ? How to interrelate the characters ?
திரைக்கதை எழுத தொடங்கும் முன் ,நம்மிடையே வெறும் ஒரு காட்சியோ அல்லது கருவோ (idea,concept ) மட்டும் தான் இருக்கும் .அதை மட்டும் வைத்து கொண்டு நாம் முன்னே செல்வதா ? பின்னே செல்வதா ?எப்படி இதை ஒரு முழு தயாரிப்பாக (Finished Product) முடிக்க போகிறோம் என்ற தயக்கம் நம் அனைவருக்குள்ளும் ஏற்ப்படுவது இயல்பே .
முதலில் அந்த கருத்தை எழுத்தில் கொண்டு வாருங்கள் .அது மிகவும் சாதாரண யோசனையாக கூட இருக்கலாம் .அதை பற்றி எல்லாம் சிந்திக்காமல் எழுத துணியுங்கள் .பின்னர் அந்த யோசனையை சுற்றி உங்கள் கற்பனை வளத்தை உபயோகியுங்கள்.
உதாரனமாக உங்கள் யோசனை ஒரு தனி நபர் பற்றியோ அல்லது ஒரு சம்பவத்தை பற்றியோ அல்லது நாவலை பற்றியோ அது எதுவாக இருந்தாலும் ,உங்கள் கதையில் வரும் கதாப்பத்திரங்களுக்கு உயிர் கொடுப்பது நீங்கள் தான் .
சரி கதாப்பத்திரங்களை ஏன் தொடர்ப்பு படுத்த வேண்டும் ?அழகிய காட்சிகள் படத்தில் இருந்தால் போதாதா ?தனி தனி சம்பவமாக இருந்து விட்டு போகட்டுமே ?ஏன் தொடர்பு படுத்த வேண்டும் ?இப்படி நாம் யோசித்தால் , தனியாக தான் , நாம் எடுக்க போகும் திரைப்படத்தை பார்க்க நேரிடும் .
பழிவாங்குவது குறித்து நாம் படம் எடுக்க போகிறோம் என வைத்துக் கொள்ளுங்கள் .யாரை பழி தீர்க்க போகிறோம் ,என கேள்வி வரும் .அப்பொழுது ஒரு கதாப்பாத்திரம் கிடைக்கும் .அடுத்து யாரால் அது அரங்கேற போகிறது என சிந்திக்கும் பொழுது அடுத்த இன்னொரு கதாப்பாத்திரம் கிடைக்கும் .
சரி இப்பொழுது நமக்கு இரண்டு கதாபாத்திரங்கள் கிடைத்து உள்ளது .அடுத்து பழி வாங்குவதற்கான காரணம் வேண்டும் .அது கொலையாகவோ ,குடும்ப பகையாகவோ ,தங்கையை கெடுத்த கயவனை பற்றியோ ,அல்லது உங்கள் தந்தையின் வேலை பறிபோக காரணமாக இருந்தவன் பற்றியோ எதை பற்றி இருந்தாலும் ,அந்த காரணம் உங்கள் கதாநாயகனை நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிப்புக்குள்ளாக்கி இருக்க வேண்டும் .
சரி பழி வாங்குவது என முடிவு செய்தாயிற்று எப்படி பழி வாங்குவது என கேள்வி மேலோங்கும் .அப்பொழுது நமக்கான திட்டம் பிறக்கும் .
திட்டம் செயல்ப்படுத்த துணை கதாப்பாத்திரம் தேவை .இப்பொழுது துணை கதாபத்திரங்களை வடிமையுங்கள் .அடுத்து ஒவ்வொரு திட்டம் குறித்து நீங்கள் சிந்திக்கும் பொழுது புதிது புதிதாக கதாபாத்திரங்கள் தோன்றும் .
அனைத்தையும் இப்பொழுது சேர்த்து பாருங்கள் .யார் முதலில் ,யார் கடைசியில் வர வேண்டும் என முடிவு செய்யுங்கள் .அனைத்து கதாபத்திரங்களும் திட்டத்தின் மைய்ய புள்ளியை நோக்கி நகர்த்தி செல்லுங்கள் .அதற்கான அடிப்படை தேவையை கதையில் உருவாக்குங்கள் .
நிச்சயம் ஒரு சுவாரசிய திரைக்கதையை இந்த கதாபாத்திரங்களின் இணைப்பின் மூலம் நாம் பெறலாம் .

Comments
Post a Comment