Posts

இசையின் கடவுள் ராஜா .!

Image
ஒரு திரைப்படத்தின் 40 சதவிகித பணியை இசையே நிறைவேற்றும் .வார்த்தைகளால் நிரப்ப முடியாத உணர்வுகளை இசை நிரப்பும் .மொழி அறியாது ,இனம் அறியாது ஆனாலும் உங்களை வசிய செய்யும் ஆற்றல் இசைக்கு உண்டு . சென்னையில் இருந்து கோவை பயணம் .பேருந்தில்  அருகில் அமர்ந்தவர் அறுபது வயது இருக்கலாம் .ஏறி  அமர்ந்த நொடி  காதில் earphone -ஐ மாட்டிக்கொண்டார் .பேருந்து செங்கல்பட்டை தாண்டுவதற்குள் கண்ணில் வழியும் நீரை, குறைந்தது இருபது முறையாவது துடைத்துக் கொண்டார் . பொறுக்கமாட்டாமல் என்ன பிரச்சனை என்று கேட்டே விட்டேன் .சிறு பிள்ளையை போல் அழ தொடங்கி விட்டார் .மூடு பனி வந்த சமயத்துல கல்யாணம் ஆச்சு தம்பி .என் பொண்டாடிக்கு ராஜா பாட்டுன அவ்ளோ பிடிக்கும் .என் இனிய பொன் நிலவே எங்க பாடுனாலும் நின்னு கேட்டுட்டு வருவா .சில சமயம் என்னையும் பாட சொல்லுவா . " பன்னீரைத் தூவும் மழை ஜில்லேன்ற காற்றின் அலை சேர்ந்தாடும் இன்னேரமே என் நெஞ்சில் என்னென்னவோ எண்ணங்கள் ஆடும் நிலை என் ஆசை உன்னொரமே" இந்த வரி பாடி முடிக்கும் போது என்ன பார்த்து ஒரு சிரிப்பு சிரிப்பா தம்பி .என் உயிர் என் கைல இருக்காது .செத்து 2

சுவாரசிய சினிமா - Parched ( HINDI )

Image
இந்த படத்தை குறித்து பேசும் முன் நம் இந்திய சமுகத்தில் பெண்களுக்கான வெளியை குறித்து முதலில் பேச வேண்டியதுள்ளது .இந்தியா  மொழியாலும் ,இனத்தாலும் பல சமுக மக்களை உள்ளடக்கிய நாடு .உலகிலேயே அதிக அளவில் பெண் கடவுள் உள்ள தேசம் .அதற்க்கு சற்றும் குறையாமல் பாலியல் வன்கொடுமை ,பெண்களுக்கு எதிரான ஆணாதிக்க மனோபாவம் ,கல்வியில் கட்டுப்பாடு ,மறுக்கப்படும் அடிப்படை  உரிமைகள் இப்படி அடக்கிக் கொண்டே போகும் அளவுக்கு பிரச்சனை உள்ள தேசமும் கூட . நீங்கள் சொல்வது எல்லாம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் இப்பொழுது எல்லாம் அப்படி கிடையாது என்று சொல்ல உங்கள் நா துடிக்கும் .அப்படி துடித்தால் நிச்சயம் நீங்கள் கிராமப்புற இந்தியாவை இன்னும் பார்க்கவில்லை என்று அர்த்தம் கொள்க .அடிப்படை சுகாதாரம் ,சாலை வசதி ,ஒருவேளை உண்பதே பெரும் பாடாய் உள்ள கிராமங்கள் இந்தியாவில் இலட்சக்கணக்கில் உள்ளது .பின் பெண் விடுதலை குறித்து எங்கே பேசுவது ? அடுத்து ஆண்களின் பார்வையில் பெண் என்பவள் ,இன்னமும் தனக்கு கீழே தான் ,என்ற மனோபாவம் கொஞ்சமும் மாறவில்லை .பெண் எத்தனை உயர் பதவியை அடைந்தாலும் அவள் கணவனுக்கும் ,குடும்பத்துக்கும் கட்டு

சிறந்த கதை கிடைக்க சமூகத்திடம் கையேந்துங்கள் !

Image
நம் தினமும் சந்திக்கும் சமுகத்தை வெகு இயல்பாய் கடந்து விடுகிறோம் .ஒவ்வொரு தனி மனிதனுக்கு பின்னும் ஒரு சமுக நெருக்கடி தொடர்ந்து வந்துக் கொண்டே இருக்கும் .எந்த தனி மனிதனின் வாழ்வியல் குறித்தும், நாம் சிந்திப்பது இல்லை .பின் கதை எங்கே தோன்றும் ? திரைக்கு எழுதுவது பெரும்பாலும் கற்பனையான உலகமாக இருந்தாலும்கூட ,நாம் வாழும் சமுகத்தில் இருந்தே அதை பெற முடியும் .Fantasy வகை கதைகளில் கூட மனித உணர்வே பிரதானமாக இருக்கும் .உங்கள்  உணர்வுகளை  சீண்டி பார்க்கும் பொழுதே அந்த படைப்பு வெற்றி அடைகிறது . அப்படி உணர்வுபெறும் வகையில் கதாப்பாத்திரங்களை பெற நீங்கள் சமூகத்தையே சார்ந்து இருக்க வேண்டும் .இதுவரை வெளிவந்த அத்தனை சிறந்த படைப்பும் ,நீங்கள் கவனிக்க தவறிய சமுகத்தின் வெளிப்பாடே .நாம் நம் உலகை தவிர  வேறு ஒரு உலகம் இருப்பதை மறந்து வாழ்கிறோம் . ஒரு சிறந்த படைப்பு  எளிய மனிதனின் வாழ்வை பிரதிபலிக்கும் பொழுதே முழுமை அடைகிறது .ஏனென்றால் 100க்கு 90 சதவிகிதம் எளிய மனிதர்களால் நிரம்பியது இந்த உலகு .ஒரு எளியவன் வலியவன் ஆகுவதையே நாம் பெரிதும் விரும்புகிறோம் .காரணம் நாம் அனைவரும் எளியவர்களே .

நரி சுட்ட வடை - NON LINEAR

Image
திரைக்கதை குறித்து கேள்வி வரும்பொழுது எல்லாம் என்னிடம் அதிகம் முன் வைக்கும் கேள்விகள் Linear -Non Linear சம்மந்தப்பட்டதாக கேட்கப்படும் .ஒவ்வொரு திரைப்படமும் தனக்னே தனி அடையாளயத்தை கொண்டு வெளிவரும்போது மக்களின் கவனத்தை ஈர்க்கிறது .தனி அடையாளம் என்பது கதை ,களம் ,நடிகர்கள் ,காட்சிப்படுத்திய விதம் என அனைத்திலும் சிறந்த கோணத்தை வெளிப்படுத்துவது . சரி இப்பொழுது வேறு விதமாக என்றால் எப்படி ?காட்சிக்கு காட்சி வித்தியாசம் காட்ட வேண்டுமா ?புதுமையை புகுத்த வேண்டுமா ?பார்வையாளரை மிரள வைக்க வேண்டுமா ?இப்படியெல்லாம் நீங்கள் சிந்தித்தால் மக்களிடம் இருந்து தூர போய் விடுவீர்கள் .மக்கள் புதிய சிந்தனயை வரவேற்பவர்கள் தான் .ஆனால் கொஞ்சம் அவர்களின் வாழ்வியலோடு தொடர்ப்புடையதாக இருக்க வேண்டும் . அடுத்து நீங்கள் சிறந்த கதை சொல்லியாக இருப்பது மிகவும் அவசியம் .சினிமா முழுக்க முழுக்க சித்தரிக்கப்பட்டவை தான் ஆனால் ஒலி -ஒளியுடன் பார்க்கும் பொழுது மூளை நிஜமாக நடக்கிறது என எண்ணிக் கொண்டு உணர்வுகளை வெளிப்படுத்த தொடங்கி விடும் .அங்கு நடப்பது பொய் என்று மூளை சுதாரித்து கொண்டால் நீங்கள் மூளை நம்பும்படியாக கதை சொல

சுவாரசிய சினிமா - Sakhavu (Malayalam)

Image
ஒவ்வொரு திரைப்படமும் நிகழ்காலத்தின் பதிவு .சமகால அரசியல் ,மக்களின் வாழ்வியல் ,சமுக மாற்றம் ,இப்படி பல தன்மைகளை தன்னை அறியாமல் பதிவு செய்யும் கருவி  சினிமா .காலம் எத்தனை வேகமாக ஓடினாலும் அதன் ஓட்டத்துக்கு ஈடுக்கொடுத்து திரைத்துறையும் இயங்கிக் கொண்டே இருக்கிறது . மலையாள சினிமா எப்பொழுதும் யதார்த்த நிலையில் இருந்து தன்னை மாற்றிக்  கொண்டதே இல்லை .எத்தனை தொழில்நுட்பம் வளர்ந்தாலும் மண் சார்ந்தும் அவர்களின் வாழ்வியல் சார்ந்துமே அங்கு திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன .அடுத்து கருத்து சுதந்திரம் தமிழகத்தை ஒப்பிடும் பொழுது பலப்படி முன்னே உள்ளது . Sakahavu (தோழர் ) படம் முன் எப்பொழுது வெளிவந்து இருந்தாலும் இத்தனை பெரிய தாக்கத்தை ஏற்ப்படுத்தி இருக்குமா தெரியவில்லை .ஆனால் இப்பொழுது உள்ள அரசியல் சூழலில் மிகவும் முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது .குறிப்பாக கேரளாவில் ஆர் எஸ் எஸ் தன் கரத்தை வலுப்படுத்த முயலும் இவ்வேளையில் இத்திரைப்படம் தோழர்களுக்கு புதிய புத்துணர்வை தந்து இருக்கும் . உண்மையில் திரைப்படத்தின் தாக்கம் என்பது உங்களை உணர்வுக்கொள்ள செய்ய வேண்டும் .அத்தைகைய உணர்வு இந்த திரைப்படத்

படத்தில் பாடல் எப்பொழுது வெற்றி பெறுகிறது ?

Image
தமிழ் சினிமாவையும் பாடல்களையும் பிரித்துப்பார்க்க பார்க்க முடியாது .உண்மையில் மக்கள் பாடல்கள் மட்டுமே கேட்பதற்கு திரையரங்கிற்க்கு வந்த காலமும் உண்டு .அந்த அளவிற்கு மக்கள் வாழ்வில் பாடல்கள்  பின்னிபினைந்துள்ளது .ஆனால் பாடல் ஏன் படத்தில் வரவேண்டும் ?பாடலுக்கும் படத்திற்கும் என்ன தொடர்ப்பு உண்டு ?திரைப்பட காட்சிகள் கூட ஓரளவிற்கு நாம் வாழ்வோடு ஒத்துப் போக கூடியது தான் .ஆனால் பாடல்கள் ?நம் நிஜத்தில் அவ்வாறு பாடுகிறோமா என்ன ?ஏன் பாடல் வரவேண்டும் இதை தெரிந்துக்கொள்ள நாம் சற்று பின்னோக்கி செல்ல வேண்டும் .நாடகத்தில் பாடியதால் அதை தழுவி திரைப்படத்திலும் பாடல்கள் வெளிவந்தது .அவ்வாறு வெளிவந்த பாடல்கள் பெரும்பாலும் கதையை மையப்படுத்தியே வந்தது .நீளமான வசனங்கள் பேச வேண்டிய இடத்தில் பாடல்கள் அந்த இடத்தை  நிறைவு செய்தது .உண்மையில் தமிழ் சினிமாவில் பாடல்கள் வந்த காரணம் இது தான் . மற்ற மாநில மொழி படங்களிலும் பாடல்கள் வருவதற்கும்  தமிழ் சினிமா தான் பெரிய காரணம் .காரணம் இந்திய சினிமாவின் ஆரம்பகாலம் சென்னையில் தான் தொடங்கியது .அதனால் இங்கு எடுக்கப்படும் படத்தின் தாக்கம் இந்தியாவெங்கும் எதிர

திரைக்கதை எளிது

Image
இணையம் வழியாக நம்மிடம்  திரைக்கதை பயிலும் நண்பர் ஒருவர் கேட்ட கேள்வி , கதையின் முடிவை முன்னரே அறிந்து வைப்பது எதற்காக ?நாம் ஏன் கதையை அதன் போக்கில் விட கூடாது ?புது புது சிந்தனை கிடைக்கும் அல்லவா ?அதை கதையில் கொண்டுவருவது நல்லது தானே என்று . உண்மையில் நாம் ஒரு கதையை தொடங்கும்போது முடிவு குறித்து எல்லாம் சிந்திப்பது இல்லை .கதை நம்மை எங்கு  இட்டு செல்கிறதோ அங்கே நாமும் செல்வோம் .நீங்கள் கதையை முடிக்கும் பொழுது நம் எதிரே நான்குக்கும் அதிகமான climax இருக்கும் .அதை தேர்ந்தெடுப்பது உண்மையில் கடினம் .காரணம் நீங்கள் climax காட்சியை மாற்றினால் முதல் காட்சியை மாற்ற நேரிடும் . அதனால் முதலில் climax குறித்து சிந்தித்த பின் எழுத தொடங்குங்கள் .முடிவு இது தான் என தெரிந்த பின் எழுதுவது மிக சுலபமாக இருக்கும் .கதையின் கிளை பிரிவுகள் தானாக விரிய தொடங்கும் .பின்னோக்கி செல்வதால் நீங்கள் நினைத்த மாதிரி எல்லாம் எழுத முடியாது .கதை ஒரு கட்டுக்குள் அடங்கி விடும் . சுப்ரமணியபுரம் திரைப்படத்தை எடுத்துக்கொள்ளுங்கள் .முதல் காட்சி கஞ்சா கருப்புவை கொலை செய்வதில் இருந்து தொடங்கும் .ஏன் கொலை நடந்தது என்று தெ