நரி சுட்ட வடை - NON LINEAR



திரைக்கதை குறித்து கேள்வி வரும்பொழுது எல்லாம் என்னிடம் அதிகம் முன் வைக்கும் கேள்விகள் Linear -Non Linear சம்மந்தப்பட்டதாக கேட்கப்படும் .ஒவ்வொரு திரைப்படமும் தனக்னே தனி அடையாளயத்தை கொண்டு வெளிவரும்போது மக்களின் கவனத்தை ஈர்க்கிறது .தனி அடையாளம் என்பது கதை ,களம் ,நடிகர்கள் ,காட்சிப்படுத்திய விதம் என அனைத்திலும் சிறந்த கோணத்தை வெளிப்படுத்துவது .

சரி இப்பொழுது வேறு விதமாக என்றால் எப்படி ?காட்சிக்கு காட்சி வித்தியாசம் காட்ட வேண்டுமா ?புதுமையை புகுத்த வேண்டுமா ?பார்வையாளரை மிரள வைக்க வேண்டுமா ?இப்படியெல்லாம் நீங்கள் சிந்தித்தால் மக்களிடம் இருந்து தூர போய் விடுவீர்கள் .மக்கள் புதிய சிந்தனயை வரவேற்பவர்கள் தான் .ஆனால் கொஞ்சம் அவர்களின் வாழ்வியலோடு தொடர்ப்புடையதாக இருக்க வேண்டும் .

அடுத்து நீங்கள் சிறந்த கதை சொல்லியாக இருப்பது மிகவும் அவசியம் .சினிமா முழுக்க முழுக்க சித்தரிக்கப்பட்டவை தான் ஆனால் ஒலி -ஒளியுடன் பார்க்கும் பொழுது மூளை நிஜமாக நடக்கிறது என எண்ணிக் கொண்டு உணர்வுகளை வெளிப்படுத்த தொடங்கி விடும் .அங்கு நடப்பது பொய் என்று மூளை சுதாரித்து கொண்டால் நீங்கள் மூளை நம்பும்படியாக கதை சொல்லவில்லை என்று அர்த்தம் கொள்க .

இப்பொழுது Non - Linear குறித்து பேசுவோம் .

ஒரு நரி சோகத்துடன் நடந்து வந்து மரத்தின் நிழலில் அமர்கிறது .மனதிற்குள் வஞ்சம் அந்த நரிக்கு .

இந்த வழியாக தான் அந்த வடை விற்கும் கிழவி வர வேண்டும் .இன்று உண்டு இல்லை என்று ஆக்கி விட வேண்டும் கோவத்துடன் பாதையையே பார்த்துக்கொண்டு உள்ளது .

என்றைக்கும் இல்லாமல் இன்று கல்லால் அடித்து துரத்தியது நரியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை .

ஒரு காக்க வாயில் வடையுடன் மரத்தை சுற்றி சுற்றி வருகிறது .எங்கே அமர்ந்து உண்பது என்பதில் அதற்கு குழப்பம் .

சரியாக நரியின் அருகே உள்ளே மரத்தின் மேல் அமர்ந்து ஒரு வித பெருமிதத்துடன் நரியை பார்க்கிறது .

நரிக்கு புரிந்து விட்டது தினமும் தனக்கு கிடைக்க வேண்டிய வடையை இன்று இந்த காக்க திருடி விட்டது அந்த கோவத்தில் தான் பாட்டி நம்மை அடித்து துரத்தி விட்டது .இப்பொழுது கோபம் காக்காவின் மீது திரும்புகிறது .

நரி காக்கவை பழி வாங்கியதா ?பாட்டியிடம் சென்று அந்த வடையை ஒப்படைத்து நற்பெயர் பெற்றதா ?

இல்லை நரி வாயில் வடையுடன் வருவதை கண்டுக்  பாட்டி ,நரி தனக்கு தெரியாமல் வடையை திருடி விட்டது என்று தவறுதலாக அர்த்தம் கொண்டு நரியை மீண்டும் அடித்து துரத்துகிறார ?

இல்லை காக்க செய்த தவறிற்காக நரியை பாட்டி வடை சூட வைக்கிறாரா ?

இப்படி முன்னும் பின்னும் அங்கங்கே கதையை சிதற விட்டு மீண்டும் தொடங்கிய இடத்தில் முடிப்பது தான் NON - LINEAR .

இப்பொழுது மேல சொன்ன கதையின் Linear வடிவம் என்னவென்று உங்களுக்கு தெரிந்து இருக்கும் .


Comments

Popular posts from this blog

திரைக்கதை அமைப்பது எப்படி ?

திரைக்கதையின் மாதிரி வடிவம் கிடைக்குமா ?

எது உலக சினிமா ?