Posts

Showing posts from May, 2017

Location முக்கியம் அமைச்சரே !!!

Image
ஜெர்மனியில் இருந்து  இணையம் வழியாக நம்மிடம் திரைக்கதை பயிலும் நண்பர்ஒருவர் , கதை தயாராக இருப்பதாகவும் ,விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்  போகதாகவும் சொன்னார் .கதைக்களம் முழுக்க முழுக்க ஐரோப்பாவில் நடப்பது போலவும் ஒரு நல்ல கிராமத்து  கதை என்றார் .நமக்கு விளங்கவில்லை ஒரு வேளை ஐரோப்பியர்களை வைத்து எடுக்கப் போகிறாரா என்ற குழப்பதில் ,என்ன மாதிரியான கதை என்று கேட்டால் ஒரு பருத்திவீரன் போல வைத்துக்கொள்ளுங்கள் என்றார் . அந்த மாதிரியான கதைக்களத்தை எப்படி அங்கே எடுப்பீர்கள் என்றால் ?இங்கேயும் கூட கிராமங்கள் உள்ளன ,மேட்ச் செய்துக் கொள்ளலாம் என்றார் .மேலும் திரைக்கதை வலுவாக இருந்தால் போதாதா என்றார் . நிச்சயம் போதாது .கதைநாயகனை விட முதன்மை நாயகன் நாம் படத்தின் பின்னணி காட்சிகள் தான் .உயிரோட்டமுள்ள பின்னணி காட்சிகள் தான் ஒரு காட்சிக்கு உயிர் தருகிறது .நம்மிடம் கேள்வி எழலாம் நடிகர்கள் தானே நடிக்க போகிறார்கள் ,பின்னால் என்ன இருந்தால் என்ன ?எது நடந்தால் என்ன ?பிறகு எதற்கு நாம் லொகேஷன் தேடுகிறோம் ? நாடகங்கள் தொடங்கிய காலம் தொட்டு பின்னணி காட்சிக்கு முக்கியத்துவம்  தரப்படுகின்றன .உதாரணமாக மணிரத்னம்

எது உலக சினிமா ?

தெரிந்த இயக்குனர் ஒருவர் ,உலக சினிமாவை சிலாகித்து பேசிக் கொண்டு இருந்தார் .அவர் கூறிய அத்தனை திரைப்படங்களும் நமக்கும் பரிச்சியமானவை தான் . தமிழ் சினிமாவில் உலக சினிமாக்களின்  தரத்தை ஒருப்போதும் எதிர்ப்பார்க்க முடியாது என்றும் ,இங்கு குப்பைகளே கொண்டாடப்படுகிறது  என்றும் வசைப்பாடியப்படியே இருந்தார் . அவர் கூறிய ஒட்டுமொத்த உலக சினிமாக்களின் வசூலை ஒரே ஒரு வணிக சினிமா முறியடிக்கிறது என்றால் ,மக்களிடையே உலக சினிமாக்கள் கொண்டு சேர்க்கப்படவில்லை அல்லது மக்கள் அதனை ரசிக்கும் மனநிலையில் இல்லை என்றே பொருள் கொள்வோம் . நாம் அடிக்கடி சொல்வது போல் சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல .அது ஒரு கொண்டாட்டம் .கலவையான உணர்வு பயணம் .மக்கள் திரையை வேடிக்கை மட்டும் பார்க்கவில்லை ,திரையினுள் பயணம் புரிகிறார்கள் .புது உலகம் ,புது மனிதர்கள் ,அவர்களின் பிரச்சனையை இவர்களின் சொந்த பிரச்சனையாக கருதி "உச்" கொட்டுகிறார்கள் .நாயகன் ஜெயித்தால் கரகோஷம் எழுப்புகிறார்கள் .தோற்றால் கவலை கொள்கிறார்கள் .ஆக சினிமா என்பது வெறும் பெயர்ச்சொல் அல்ல மக்களின் உயிர்சொல்லாக இருந்து வருகிறது . சரி உலக சினிமா

கதை அமைப்பது எளிது .

லைன் நல்லா இருந்தா பண்ணலாம் ,ஸ்டோரி வெய்ட் -ஆ இருக்கணும் ,கதையே கிடைக்கல நல்ல கதை இருந்தா சொல்லுங்க பண்ணலாம் இப்படி பலவித புலம்பல்களை நாம் எதிர்க்கொண்டு வருகிறோம் . உண்மையில் கதை என்பது என்ன ?ஒரு சம்பவத்தின் தொகுப்பு அல்லது பல சம்பவங்களின் தொகுப்பு .அந்த சம்பவங்கள் மூலம் நீங்கள் ரசிகனின் கவனத்தை ஈர்க்க முடியுமா ?முடிந்தால் நீங்கள் வென்று விட்டீர்கள் என்று நினைத்துக் கொள்ளுங்கள் . ஆனால் திரைக்கு எழுதுவது சிறுகதை ,நாவல் போல அல்ல .ஒவ்வொரு எழுத்தும் காட்சியாக மாறும் .அதனால் நாம் நினைத்தப்படி எல்லாம் எழுத முடியாது . உதாரணமாக "மழை பெய்துக் கொண்டு இருந்தது ,ரயிலின் ஓசை மெல்ல மெல்ல அவனை நெருங்கியது .மழையை கிழித்துக் கொண்டு ரயில் கடந்து சென்றது .அவன் ரயில் தடத்தை பார்த்துக் கொண்டே இருந்தான் ". மேல சொன்னது போல் உங்கள் காட்சி வர்ணனை இருந்தால் ,முதலில் ரயில் பாதையை தேர்வு செய்ய வேண்டும் .பிறகு மழை பொழிய வேண்டும் .ஒரே நேரத்தில் ரயில் அவனை  கடந்து செல்வதையும் ,மழையை  கிழித்து செல்வதையும் காட்ட இயலாது .அதனால் நீங்கள் ரயிலை வாடகைக்கு எடுக்க வேண்டும் . இப்படி நடைமுறை சிக்கல்கள் இரு

திரைக்கதை அமைப்பது எப்படி ?

சமீப காலமாக தமிழ் சினிமாவில் திரைக்கதை குறித்து பெரிதும் பேசப்படுகிறது .வெகுஜன மக்களும் திரைக்கதையின் மேல் கவனம் செலுத்துவதை கண்கூடாக பார்க்க முடிகிறது .அதன் வெளிப்பாடு தான் புதுமுக இயக்குனர்களின் வெற்றி .சினிமாவை பார்த்து மக்களும் மக்களை பார்த்து சினிமாவும் ஒருவரிடமிருந்து ஒருவர்  கற்றுக் கொள்கின்றனர் . சரி திரைக்கதை என்பது என்ன ?எதனால் ஒரு படத்துக்கு நல்ல திரைக்கதை அமைப்பு தேவை ?திரைக்கதை இல்லாமல் வெறும் நல்ல காட்சிகளை மட்டும் வைத்து படம் எடுக்க முடியாதா ?பிரபல நடிகர் ,நடிகை ,புகழ் பெற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் ,பிரமாண்ட இயக்குனர் இவர்கள் போதாதா ?படம் வெற்றியடைய ? நிச்சயம் போதாது .திரைக்கதை தான்  ஆணிவேர் .ஆழ ,அகல தோண்டி ஊன்றப்படும் மரத்தின் உறுதி போன்றது திரைக்கதை.ஒரு கட்டடம் கட்டப்படும் முன்  அதற்க்கான திட்டம் போன்றது .இம்மியளவு பிசகினாலும் கட்டடம் தரைமட்டம் ஆகி விடும் .ஆக வரைப்படத்தில் என்ன உள்ளதோ அதுவே உங்கள் கட்டடத்தின் நிஜ உருவம் .உள்கட்டுமானம் சரியாக இருந்தால் போதும் என்ன நடந்தாலும் கட்டடத்தை குலைக்க முடியாது . சரி இப்பொழுது கதை தயார் .உதாரனமாக ஏழை இளைஞன் தன்னுடைய

புதுமுக நடிகனாக நீங்கள் ஜெயிக்க விரும்பினால் ?

நம்மில்  ஒரு நடிகன் எப்போதும் துளிர்த்துக் கொண்டே இருப்பான் .எப்படியாவது நாமும் ஒரு நடிகர் ஆகி விட மாட்டோமா என்ற ஏக்கம் ஒரு நிமிடமாவது நம்மில் பலருக்கு வந்து விட்டு போய்  இருக்கும் .உதாரணமாக கிரிக்கெட் பார்த்துக் கொண்டு இருக்கும் பொழுது ஒரு வேலை நாம் அங்கே ஆடி இருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனை நிச்சயம் நம்மில் அனைவருக்கும் இருந்து இருக்கும் . நம்மை அறியாமல்  நம்மையே சில இடங்களில் பொருத்தி பார்த்துக் கொள்வோம் .அப்படி அடிக்கடி நம்மை பொருத்தி பார்த்துக் கொள்வது திரைப்படங்கள் பார்க்கும் பொழுது தான் .சில இடங்களில் உணர்வு பெருக்கு அடக்க முடியாமல் திணறி இருப்போம் .மகிழ்ச்சியில் திளைத்து இருப்போம் .கோவத்தில் ,பயத்தில் ,ஆச்சிரியத்தில் வியந்து இருப்போம் . இத்தனை உணர்வுகளையும் ஒருங்கே நாம் பெறுவது திரையில் தான் .ஒரு விஷயம் தெளிவாக நாம் புரிந்துக் கொள்ள வேண்டும் .நாம் பார்ப்பது நிஜம் என பார்வையாளர் நம்ப வேண்டும் .அதற்க்கு ,அவர்களை போலவே ஒருவன் திரையில் வர நினைக்கிறார்கள் .எந்த வித ஆர்ப்பரிப்பு இல்லாமல் நம்மில் ஒருவனாக அவன் இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள் . நன்றாக நினைவு இருக்கிறது