திரைக்கதை அமைப்பது எப்படி ?

சமீப காலமாக தமிழ் சினிமாவில் திரைக்கதை குறித்து பெரிதும் பேசப்படுகிறது .வெகுஜன மக்களும் திரைக்கதையின் மேல் கவனம் செலுத்துவதை கண்கூடாக பார்க்க முடிகிறது .அதன் வெளிப்பாடு தான் புதுமுக இயக்குனர்களின் வெற்றி .சினிமாவை பார்த்து மக்களும் மக்களை பார்த்து சினிமாவும் ஒருவரிடமிருந்து ஒருவர்  கற்றுக் கொள்கின்றனர் .

சரி திரைக்கதை என்பது என்ன ?எதனால் ஒரு படத்துக்கு நல்ல திரைக்கதை அமைப்பு தேவை ?திரைக்கதை இல்லாமல் வெறும் நல்ல காட்சிகளை மட்டும் வைத்து படம் எடுக்க முடியாதா ?பிரபல நடிகர் ,நடிகை ,புகழ் பெற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் ,பிரமாண்ட இயக்குனர் இவர்கள் போதாதா ?படம் வெற்றியடைய ?

நிச்சயம் போதாது .திரைக்கதை தான்  ஆணிவேர் .ஆழ ,அகல தோண்டி ஊன்றப்படும் மரத்தின் உறுதி போன்றது திரைக்கதை.ஒரு கட்டடம் கட்டப்படும் முன்  அதற்க்கான திட்டம் போன்றது .இம்மியளவு பிசகினாலும் கட்டடம் தரைமட்டம் ஆகி விடும் .ஆக வரைப்படத்தில் என்ன உள்ளதோ அதுவே உங்கள் கட்டடத்தின் நிஜ உருவம் .உள்கட்டுமானம் சரியாக இருந்தால் போதும் என்ன நடந்தாலும் கட்டடத்தை குலைக்க முடியாது .


சரி இப்பொழுது கதை தயார் .உதாரனமாக ஏழை இளைஞன் தன்னுடைய கடின உழைப்பால் முன்னுக்கு வருவது தான் உங்கள் கதை என வைத்து கொள்வோம் .இதை இரண்டு மணி நேரத்தில் திரையில் சொல்ல வேண்டும் .இங்கு தான் சிக்கல் பிறக்கும் .


கடின உழைப்பு என்றால் எந்த மாதிரியான உழைப்பு ?எதற்காக அவன் மட்டும் கடினமாக உழைக்க வேண்டும் .முன்னுக்கு வர வேண்டிய தேவை என்ன ?அப்படி அவன் யாருக்காக முன்னுக்கு வருகிறான் ?சரி முன்னுக்கு வந்தாயிற்று அடுத்து அவன் இலக்கு என்ன ?அதோடு படம் முடிகிறதா ?இல்லை முன்னுக்கு வந்த பின் யாரையாவது பழிவாங்கும் எண்ணம் உள்ளதா ?இப்படி அனைத்து கேள்விகளுக்கும் இரண்டு மணி நேரத்தில் உங்களிடம் பதில் இருக்கிறதா என்பதை தெளிவுப் படுத்தி கொள்ளுங்கள் .


முதலில் உங்கள் கதை தொடங்கும் முன் அது எந்த ஊரிலே ,எந்த காலக்கட்டத்தில் நடக்கிறது என்பதை தீர்மானியுங்கள் .அடுத்து அந்த இளைஞன் யார் என முடிவுக்கு வாருங்கள் .அவனின் குடும்ப பின்னணி ,வயது ,சுபாவம் என அத்தனையும் முடிவு செய்யுங்கள் .
அடுத்து கடந்து போக போகும் பாதையை உருவாக்குங்கள் .


யார் எல்லாம் அவனை எதிர்த்தார்கள் .யார் எல்லாம் அவனை ஆதரித்தார்கள் .எதிர்ப்பதற்கான காரணம் என்ன ?ஆதரிப்பதர்க்கான காரணம் .யதார்த்தில் பொருந்தக் கூடிய அளவில் நாம் காட்சி அமைத்து இருக்கிறோமா ?என்பதை எல்லாம் கவனிக்க வேண்டும் .

அடுத்து Limited Characters மட்டும்  கதையில் பயணம் செய்யுமாறு பார்த்துக்கொள்ளுங்கள் .முடிந்தவரை அனைத்து கதாப்பாத்திரமும் கதையில் முக்கியத்துவம் கொடுங்கள் .எந்த கதாபத்திரங்களும் வெறுமென திரையில் வந்து விட்டு போவதை தவிறுங்கள் .

ஏன் என்றால் சினிமா நாவல் கிடையாது .எப்பொழுது வேண்டுமானால் புது கதாப்பாத்திரத்தை அறிமுகப்படுத்த .நமக்கு இங்கே கொடுக்கப்பட்ட நேரம் குறைவு .அதனால் தான் முன்னரே கதாப்பாத்திர அறிமுகம் நடக்க வேண்டி உள்ளது .இவர்கள் தான் இனி கதை நெடுக வரபோகிறார்கள் என்பதை அறிவிக்கவே கதாபாத்திரத்தை நாம் தொடக்கத்திலேயே அறிவித்து விடுகிறோம் .

சுஜாதா ஒரு நேர்க்கானலிலே சொல்லி இருப்பார் ."ஒவ்வொரு படைப்பாளனும் சமகாலத்திற்கு ஏற்ப தன்னை தரஉயர்வு படுத்திக்கொள்ள வேண்டும் .வெளி உலகில் மக்களின்  வாழ்வியல் முறை ,  புழங்கு மொழி நாளுக்கு நாள் மாறிக்கொண்டே வருகிறது .அதற்க்கு ஏற்ப நம்மின் படைப்பானது அமைய வேண்டும் ."

மேல சுஜாதா சொன்னதை உங்கள் படைப்பினுள் கட்டாயம் பயன்ப்படுத்துங்கள் .ஏன் என்றால் நாம் சமகாலத்திற்க்கே படம் எடுக்கிறோம் .


Comments

Popular posts from this blog

திரைக்கதையின் மாதிரி வடிவம் கிடைக்குமா ?

எது உலக சினிமா ?