புதுமுக நடிகனாக நீங்கள் ஜெயிக்க விரும்பினால் ?

நம்மில்  ஒரு நடிகன் எப்போதும் துளிர்த்துக் கொண்டே இருப்பான் .எப்படியாவது நாமும் ஒரு நடிகர் ஆகி விட மாட்டோமா என்ற ஏக்கம் ஒரு நிமிடமாவது நம்மில் பலருக்கு வந்து விட்டு போய்  இருக்கும் .உதாரணமாக கிரிக்கெட் பார்த்துக் கொண்டு இருக்கும் பொழுது ஒரு வேலை நாம் அங்கே ஆடி இருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனை நிச்சயம் நம்மில் அனைவருக்கும் இருந்து இருக்கும் .

நம்மை அறியாமல்  நம்மையே சில இடங்களில் பொருத்தி பார்த்துக் கொள்வோம் .அப்படி அடிக்கடி நம்மை பொருத்தி பார்த்துக் கொள்வது திரைப்படங்கள் பார்க்கும் பொழுது தான் .சில இடங்களில் உணர்வு பெருக்கு அடக்க முடியாமல் திணறி இருப்போம் .மகிழ்ச்சியில் திளைத்து இருப்போம் .கோவத்தில் ,பயத்தில் ,ஆச்சிரியத்தில் வியந்து இருப்போம் .

இத்தனை உணர்வுகளையும் ஒருங்கே நாம் பெறுவது திரையில் தான் .ஒரு விஷயம் தெளிவாக நாம் புரிந்துக் கொள்ள வேண்டும் .நாம் பார்ப்பது நிஜம் என பார்வையாளர் நம்ப வேண்டும் .அதற்க்கு ,அவர்களை போலவே ஒருவன் திரையில் வர நினைக்கிறார்கள் .எந்த வித ஆர்ப்பரிப்பு இல்லாமல் நம்மில் ஒருவனாக அவன் இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள் .

நன்றாக நினைவு இருக்கிறது ஜெயம் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஜெயம் ரவி வில்லனை அடிக்க துவங்கும் இடத்தில ஒட்டு மொத்த திரையரங்கமும் அதிர்ந்தது .காரணம் ஒரு எளியவன் வலியவன் ஆவதை நாம் விரும்புகிறோம் .நம்மையே அங்கே பொருத்தி பார்த்துக் கொள்கிறோம் .நான் தான் திரையில் உள்ளேன் என்ற அளவுக்கு நேரடியாக திரை நம்மை அணைத்து கொள்கிறது .

நாயகன் ,பாட்ஷா இரண்டு திரைப்படங்களை கூட எடுத்துக்கொள்ளுங்கள் .ஒரு சாதாரண மனிதன் சில சம்பவங்களால் விஸ்வரூபம் எடுப்பதை நாம் மெய் மறந்து பார்க்கிறோம் .மீண்டும் நினைவுப் படுத்தி கொள்ளுங்கள் எளியவன் வலியவன் ஆவதை தான் நாம் நேசிக்கிறோம் .

தமிழ் படம் மட்டும் அல்ல நீங்கள் ஆங்கில படங்களையே கூட எடுத்துக் கொள்ளுங்கள் .ஒரு சூப்பர் மேன் கூட சாதாரண மனிதராக இருந்து மாறுவதையே நாம் விரும்புகிறோம் .ஏன் என்றால் திரைப்படத்தை காணும் 98%மக்கள் சாதாரண மக்களே .அவர்கள் பெற விரும்புவது ஒரு இடைக்கால விடுதலை .இரண்டு மணி நேரத்தில் அது கிடைக்கும் பொழுது குறிப்பிட்ட அந்த கதாநாயகரின் படத்துக்கு மேலும் இரண்டு மணி நேரம் செலவழிக்க மக்கள் தயார் நிலையில் உள்ளனர் .

இங்கே தான் புதுமுகங்கள் சில தவறு செய்கிறார்கள் .இதுவரை வந்த சினிமா பாணியிலே அவர்களும் பயணிக்க விரும்புகிறார்கள் .அறிமுக பாடல் ,கதாநாயகி அறிமுகம் ,காதல் பாடல் ,புதுமுகம் என்பதால் சில பத்து பேரை அடிப்பது  என அச்சு பிசுராமல் நடிக்க முன் வரும் எந்த நடிகரும் இங்கே நிற்பது இல்லை .எதார்த்தத்தை புரிந்துக் கொள்ளுங்கள் ,உங்களை மக்கள் ஏற்ப்பதர்க்கு  முன் நீங்கள் அவர்களில் ஒருவராக திரையில்  இருக்க வேண்டும் .

உதயநிதி ,அருள்நிதி ஆகிய இருவரின் செல்வாக்குக்கும் எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாம் .ஆனால் கலைஞரின் பேரனாக இருந்தாலும் திரையில் பந்தா காட்டினால் மக்கள் ஓரம் கட்டி விடுவார்கள் .ஆக புதுமுகமாக  விரும்பினால் முதலில் நீங்கள் செய்ய வேண்டியது மக்களில் ஒருவனாக இருக்கும் கதாப்பாத்திரத்தை தேர்வு செய்யுங்கள் .நல்ல திரைக்கதை அமைப்பை தேர்ந்து எடுங்கள் .உங்கள் நடிப்பு சற்று சறுக்கினாலும் திரைக்கதை உங்களை காப்பாற்றி விடும் .

Comments

Popular posts from this blog

திரைக்கதை அமைப்பது எப்படி ?

திரைக்கதையின் மாதிரி வடிவம் கிடைக்குமா ?

எது உலக சினிமா ?