கதை அமைப்பது எளிது .

லைன் நல்லா இருந்தா பண்ணலாம் ,ஸ்டோரி வெய்ட் -ஆ இருக்கணும் ,கதையே கிடைக்கல நல்ல கதை இருந்தா சொல்லுங்க பண்ணலாம் இப்படி பலவித புலம்பல்களை நாம் எதிர்க்கொண்டு வருகிறோம் .

உண்மையில் கதை என்பது என்ன ?ஒரு சம்பவத்தின் தொகுப்பு அல்லது பல சம்பவங்களின் தொகுப்பு .அந்த சம்பவங்கள் மூலம் நீங்கள் ரசிகனின் கவனத்தை ஈர்க்க முடியுமா ?முடிந்தால் நீங்கள் வென்று விட்டீர்கள் என்று நினைத்துக் கொள்ளுங்கள் .

ஆனால் திரைக்கு எழுதுவது சிறுகதை ,நாவல் போல அல்ல .ஒவ்வொரு எழுத்தும் காட்சியாக மாறும் .அதனால் நாம் நினைத்தப்படி எல்லாம் எழுத முடியாது .

உதாரணமாக "மழை பெய்துக் கொண்டு இருந்தது ,ரயிலின் ஓசை மெல்ல மெல்ல அவனை நெருங்கியது .மழையை கிழித்துக் கொண்டு ரயில் கடந்து சென்றது .அவன் ரயில் தடத்தை பார்த்துக் கொண்டே இருந்தான் ".

மேல சொன்னது போல் உங்கள் காட்சி வர்ணனை இருந்தால் ,முதலில் ரயில் பாதையை தேர்வு செய்ய வேண்டும் .பிறகு மழை பொழிய வேண்டும் .ஒரே நேரத்தில் ரயில் அவனை  கடந்து செல்வதையும் ,மழையை  கிழித்து செல்வதையும் காட்ட இயலாது .அதனால் நீங்கள் ரயிலை வாடகைக்கு எடுக்க வேண்டும் .

இப்படி நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் ,எழுதம் பொழுதே எது தேவை ,தேவையற்றது என்பதை முடிவு செய்துக் கொண்டு எழுத ஆரம்பியுங்கள் .உங்கள் எழுத்து அனைத்தும் பணமாக ,உழைப்பாக மாறும் பொழுது விரையும் ஆகாமல் தடுக்கப்படும் .

அடுத்து கதைக்கு வருவோம் .நீங்கள் எதைக் குறித்து படம் எடுக்கப் போகிறீர்கள் என்பதை தீர்மானியுங்கள் .genre முடிவு செய்யுங்கள் .அடுத்து சமகால சம்பவங்களோடு தொடர்ப்பு படுத்தி கதைக் களம் அமையுங்கள் .

கதை கிடைக்கவில்லை என்பது எல்லாம் வீண் பேச்சு .நம்மை சுற்றியே எப்பொழுதும் கதை நாயகர்கள் உலவி கொண்டே இருக்கிறார்கள் .திருக்குறளை எடுத்துக்கொள்ளுங்கள் உங்களால் ஆயிரம் கதைகள் பண்ண முடியும் .


"ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்.


மீண்டும் மீண்டும் ஆராயாமல் கொள்கிற நட்பு, கடைசியில் ஒருவர் சாவுக்குக் 
காரணமாகிற அளவுக்குத் துயரத்தை உண்டாக்கி விடும். 

மேல சொன்ன குறளை வைத்து உங்களால் கதை பண்ண முடியாதா ?உங்கள் கதை நாயகன் நல்லவன் என்று வைத்துக் கொள்ளுங்கள் .அனைவரையும் கண்மூடி தனமாக நம்புகிறான் .தன்னிடம் உதவி கேட்டு வந்தவனால் ஏற்படும் சிக்கலால் பெரும் ஆபாத்திலிருந்து மீண்டு வருவது தான் கதை .

இப்பொழுது உங்கள் நாயகன் யார் ?உதவி கேட்டு வந்தவன் யார் ?உயிர்ப் போகும் அளவுக்கு என்ன ஆபத்தில் சிக்குகிறான் .என்பதை இரண்டு மணி நேரம் சுவாரசியம் குறையாமல் நம்மால் எழுத முடியாதா ?

நாம் எழுத போவது திரைக்கதை .அதனால் சில விதிமுறைகளும் வரம்புகளும் நாம் பின்பற்ற வேண்டும் .கதை நாயகன் இறுதியில் வெல்ல போகிறான் என்பது தெரியும் .ஆனால் அதை இரண்டு மணி நேரம் மறைத்து வைத்து சொல்வது தான் திரைக்கதை .

Comments

Popular posts from this blog

திரைக்கதை அமைப்பது எப்படி ?

திரைக்கதையின் மாதிரி வடிவம் கிடைக்குமா ?

எது உலக சினிமா ?