இசையின் கடவுள் ராஜா .!
ஒரு திரைப்படத்தின் 40 சதவிகித பணியை இசையே நிறைவேற்றும் .வார்த்தைகளால் நிரப்ப முடியாத உணர்வுகளை இசை நிரப்பும் .மொழி அறியாது ,இனம் அறியாது ஆனாலும் உங்களை வசிய செய்யும் ஆற்றல் இசைக்கு உண்டு . சென்னையில் இருந்து கோவை பயணம் .பேருந்தில் அருகில் அமர்ந்தவர் அறுபது வயது இருக்கலாம் .ஏறி அமர்ந்த நொடி காதில் earphone -ஐ மாட்டிக்கொண்டார் .பேருந்து செங்கல்பட்டை தாண்டுவதற்குள் கண்ணில் வழியும் நீரை, குறைந்தது இருபது முறையாவது துடைத்துக் கொண்டார் . பொறுக்கமாட்டாமல் என்ன பிரச்சனை என்று கேட்டே விட்டேன் .சிறு பிள்ளையை போல் அழ தொடங்கி விட்டார் .மூடு பனி வந்த சமயத்துல கல்யாணம் ஆச்சு தம்பி .என் பொண்டாடிக்கு ராஜா பாட்டுன அவ்ளோ பிடிக்கும் .என் இனிய பொன் நிலவே எங்க பாடுனாலும் நின்னு கேட்டுட்டு வருவா .சில சமயம் என்னையும் பாட சொல்லுவா . " பன்னீரைத் தூவும் மழை ஜில்லேன்ற காற்றின் அலை சேர்ந்தாடும் இன்னேரமே என் நெஞ்சில் என்னென்னவோ எண்ணங்கள் ஆடும் நிலை என் ஆசை உன்னொரமே" இந்த வரி பாடி முடிக்கும் போது என்ன பார்த்து ஒரு சிரிப்பு சிரிப்பா தம்பி .என் உயிர் என் கைல இருக்காது .செத்து 2