ஹீரோவை மக்கள் எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள் ?

நம்பினால் நம்புங்கள் தமிழ் சினிமா அளவுக்கு வேறு எந்த மொழியிலும் இத்தனை கதாநாயகர்கள் இல்லை .
சரி மக்கள் எதனால் பிம்பங்களை கொண்டாடி தீர்கின்றனர் .நாட்டை ஆளும் அளவுக்கு எப்படி சினிமா பிம்பங்கள்
மக்களை கவர்ந்தது ?எப்படி மக்களிடம் கதாநாயகர்கள் உருவாகிறார்கள் ?எதனால் அவர்களை மக்கள் ஏற்கிறார்கள் ?

இத்தனை கேள்விக்கான பதிலும் மக்களின் நிராசையே ,மக்களின் தனிப்பட்ட வாழ்வின் தோல்வியே ,அவர்களால் நிஜத்தில்
செய்ய முடியாத அத்தனையும் திரையில் ஒரு கதாபாத்திரம் செய்யும் பொழுது உற்சாகம் தாளாமல் பொங்கி தீர்கின்றனர் .
சரி திரைக்கு வரும் மொத்த படத்தையும் அல்லவா அவர்கள் கொண்டாட வேண்டும் ?அத்தனை புதுமுக நாயகர்களையும் அல்லவா மக்கள் ஏற்க வேண்டும் ?ஏன் சிலரை மட்டும் மக்கள் ஏற்கின்றனர் ?சிலரை மட்டும் ஏன் உச்சி முகர்ந்து உயிரை கொடுக்கின்றனர் ?

சினிமாவில் ஆயிரம் புதுமுகங்கள் அறிமுகம் ஆனாலும் அத்தனை பெரும் வெற்றி பெற முடியவில்லை ஏன் என்று சிந்தித்து பார்த்து
இருக்கீறார்களா?காரணம் இது தான்" எளியவன் வலியவன் ஆவதை மக்கள் விரும்புகின்றனர் "  .ஒரே நேரத்தில் 100 பேரை அடிக்கும்
ஹீரோவை நம்பும் மக்கள் அந்த ஹீரோவின் ஆரம்ப கால படங்களை எடுத்து பாருங்கள் .மிக சாதாரண கதாபாத்திரமாக திரையில் தோன்றி இருப்பார் .

இன்னும் எளிமையாக விளக்குவது என்றால் கதாநாயகன் கஷ்டப்பட வேண்டும் clicheஆக இல்லாமல் சில நியாங்களோடு பாத்திர படைப்பு இருக்க வேண்டும் .நம்பவில்லை என்றால்  அப்படி வந்த நாயகர்களை அறிமுகப்படுத்துகிறேன் பாருங்கள் .

சேது படத்தில் விக்ரம் ,நந்தா படத்தில் சூர்யா , காதல் திரைப்படத்தில் பரத் ,ஜெயம் படத்தில் ரவி , காதல் கொண்டேன் தனுஷ் ,மைனா வித்தார்த் ,கும்கி விக்ரம் பிரபு ,தென்மேற்கு பருவக்காற்று விஜய் சேதுபதி ,இன்னும் விடுப்பட்ட அத்தனை பெயரையும் எடுத்துகொள்ளுங்கள் .

வெற்றிக்கான ஒரே அடிப்படைக் காரணம் கதாபாத்திரம் எளிமையாக இருக்க வேண்டும் ,வலுவான காரணங்களோடு தன்னை விட வலிமையானவனை எதிர்க்க வேண்டும் .அப்பொழுது தான் மக்கள் அங்கீகரிப்பார்கள் ,ஏன் என்றால் 98 சதவிகிதம் எளியவர்களே இந்த பூமியில் வாழ்கின்றனர் .அவர்களே
ஹீரோவை உருவாக்கி ,கொண்டடி மகிழ்பவர்கள் .

Comments

Popular posts from this blog

திரைக்கதை அமைப்பது எப்படி ?

திரைக்கதையின் மாதிரி வடிவம் கிடைக்குமா ?

எது உலக சினிமா ?